திமுக முதன்மை செயலாளராக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

Advertisment

இது குறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ள திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன், "திமுக முதன்மை செயலாளராகப் பொறுப்பு வகித்து வரும் டி.ஆர்.பாலு எம்.பி, திமுக நாடாளுமன்ற குழுத் தலைவராக பொறுப்பு வகித்து வருவதால், அவருக்கு பதிலாக திமுக முதன்மை செயலாளராக கே.என்.நேரு எம்.எல்.ஏ நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்".

Advertisment

 DMK Appointment of KN Nehru as Chief Secretary

திமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான கே.என்.நேரு, ஏறத்தாழ சுமார் 30 ஆண்டுகள் திருச்சி மாவட்ட செயலாளராக இருந்துள்ளார், மேலும் அண்மையில் நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் கே.என்.நேரு தலைமையில் திருச்சியில் மொத்தம் உள்ள 14 ஒன்றியங்களையும் திமுக காப்பாற்றியது.

 DMK Appointment of KN Nehru as Chief Secretary

இதனால் நேருவுக்கு கட்சியில் உயர் பதவி வழங்கப்படலாம் என்ற செய்தி வெளியான நிலையில், திமுக தலைமை கழகம் அவருக்கு திமுகவின் முதன்மை செயலாளர் பொறுப்பை வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisment