
செப்டம்பர் 13-ஆம் தேதி மாநிலங்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், திமுக சார்பில் வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து வரும் நிலையில் கூட்டமானது செப்டம்பர் 21ஆம் தேதி வரை நடைபெறும் என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் மாநிலங்களவை தேர்தல் செப்டம்பர் 13-ஆம் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், சட்டப்பேரவை கூட்டத் தொடரின் நாட்களைக் குறைத்துக்கொள்ள முடிவு எடுக்கப்பட்டு செப்டம்பர் 13-ஆம் தேதி வரை கூட்டத்தொடரை நடத்த திட்டமிட்டிருக்கிறது தமிழக அரசு. தமிழகத்தில் காலியாக உள்ள மூன்று மாநிலங்களவை இடங்களில் ஒரு இடத்திற்கு தேர்தல் நடக்கிறது.
இந்நிலையில் செப்டம்பர் 13 ஆம் தேதி நடைபெறும் மாநிலங்களவைத் தேர்தலில் திமுக சார்பில் எம்.எம்.அப்துல்லா போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். திமுகவின் வெளிநாடு வாழ் இந்தியர்கள் அணியின் இணை செயலாளராக இருப்பவர் எம்.எம் அப்துல்லா. இவர் புதுக்கோட்டையைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.