Advertisment

முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய திமுகவினர்கள்!

DMK and AIADMK pay homage to Muthuramalingam statue

தமிழ்நாடு முழுவதும் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 114வது பிறந்தநாள் விழா விமரிசையாக கொண்டாடப்பட்டுவருகிறது. அவருடைய பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள அவரது திருவுருவ சிலைக்கு நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு தலைமையில் திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

Advertisment

அவர்களைத் தொடர்ந்து அதிமுக தரப்பில் முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மேலும், பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் மற்றும் கட்சி உறுப்பினர்கள் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் உள்ளிட்ட பலர் அவருடைய திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

Advertisment

admk Muthuramalingam Thevar tribute
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe