கடந்த 2014 ஆம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் அதிமுக தமிழகத்தில் மொத்தம் உள்ள 39 மக்களவை தொகுதிகளில் 37 மக்களவை தொகுதியில் வெற்றிப்பெற்றது. இந்த தொகுதிகளில்

திருப்பூர் மக்களவை தொகுதி உறுப்பினர் : வி. சத்யபாமா ,

திருவண்ணாமலை மக்களவை தொகுதி உறுப்பினர் : ஆர். வனரோஜா ,

தென்காசி மக்களவை தொகுதி உறுப்பினர் : எம். வசந்தி

Advertisment

காஞ்சிபுரம் மக்களவை தொகுதி உறுப்பினர் : கே. மரகதம்

உள்ளிட்டநான்கு பெண்கள் அதிமுக மக்களவை உறுப்பினர்களாக தற்போது உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

Advertisment

kanimozhi

2019 ஆம் ஆண்டுக்கான மக்களவை தேர்தல் தேதியை சமீபத்தில் இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது.அதிமுக மற்றும் திமுக கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தையில் மும்முரமாக ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து கூட்டணிகள் உறுதி செய்யப்பட்டு கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இந்நிலையில் 17.03.2019 அன்று திமுக மற்றும் அதிமுக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டனர்.

இதில் அதிமுக மற்றும் திமுக கட்சிகள் தலா 20 இடங்களில் போட்டியிடுகிறது. அதனை தொடர்ந்து வேட்பாளர்கள் விவரங்களை நாம் ஆராய்ந்ததில் திமுக சார்பில் தூத்துக்குடி மக்களவை தொகுதியில் திமுக ராஜ்ய சபா உறுப்பினர் கனிமொழிக்கும், தென் சென்னை மக்களவை தொகுதியில் தமிழச்சி தங்கபாண்டியனுக்கும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதிமுக சார்பில் ஒரே பெண் வேட்பாளர் மரகதம் குமரவேல். காஞ்சிபுரம் மக்களவை தொகுதியில்போட்டியிடுகிறார். கடந்த 2014 மக்களவைத் தேர்தலில் காஞ்சிபுரம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். மீண்டும் அவருக்கு போட்டியிட அதிமுக தலைமை வாய்ப்பு வழங்கியுள்ளது.

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

thamilachi thangapandiyanmaragatham

கடந்த மக்களவை தேர்தலில் அதிமுகவில் 4 பெண்கள் போட்டியிட ஜெயலலிதா வாய்ப்பளித்தார்.

கலைஞர் மற்றும் ஜெயலலிதாஉட்பட இரு தலைவர்கள் இருந்திருந்தால் வேட்பாளர்கள் தேர்வு எப்படி இருந்திருக்கும்? தற்போது உள்ள அதிமுக மற்றும் திமுக தலைவர்களின் செயல்பாடுகள் எப்படி உள்ளது என்று தமிழக மக்கள் உற்று நோக்குக்கின்றனர். மேலும் இரு கட்சிகளும் பெண்களுக்கான இட ஒதுக்கீட்டை முறையாக பின்பற்றவில்லை. அதேபோல் பெண்களுக்கு மக்களவை தொகுதியில் 10% இட ஒதுக்கீடு கூட தமிழக அரசியல் கட்சிகள் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பி.சந்தோஷ் , சேலம்.