Advertisment

கண்ணில் கருப்பு ரிப்பன் கட்டிக்கொண்டு திமுக அதிமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு!

DMK and AIADMK councillors walked out of municipal meeting

ராணிப்பேட்டை இன்று நகர மன்றம் கூட்டம் நடைபெற்ற நிலையில் எந்த வித பணிகளும் நடைபெறவில்லை என்று திமுக அதிமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்துள்ளனர்.இந்த கூட்டத்தில் நகராட்சியின் நகர மன்ற பொறுப்புத் தலைவர் குல் ஜார் மற்றும் ஆணையாளர் பழனி பணிபுரியும் நகராட்சியில் வார்டுகளில் எந்த ஒரு பணியும் நடைபெறாத வில்லை என்று ஆதங்கத்தை வெளிப்படுத்தி அதிமுக, திமுகவை சேர்ந்த கவுன்சிலர்கள் உள்பட12 கவுன்சிலர்கள் கண்ணில் கருப்பு ரிப்பன் கட்டி கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர். அத்துடன் நிறைவேறாத பணிகளை கண்டித்து பலரும் வெளிநடப்பு செய்தனர். இதனைத் தொடர்ந்து நகர மன்ற கூட்டத்தில் இருந்து அனைத்து கவுன்சிலர்களும் வெளிநடப்பு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Advertisment

DMK and AIADMK councillors walked out of municipal meeting

இது குறித்து பேசிய 5 வது வார்டு நகர மன்ற உறுப்பினர் ஜமுனா ராணி, “காலில் எலும்பு முறிவு ஏற்பட்ட நிலையிலும் நாங்கள் நகர மன்ற கூட்டத்தில் கலந்து கொண்டு மக்கள் குறையை கூறுகிறோம். ஆனால் அவர்கள் எந்த விதமான பணிகளையும் செய்யாமல் இருப்பது மிகுந்த வருத்தமாக இருக்கிறது” என்றார்.

Advertisment
ranipet Councillor admk
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe