திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் (98) மூச்சுத்திணறல் காரணமாக திங்கள்கிழமை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

Advertisment

dmk Anbazhagan

Advertisment

க.அன்பழகன் உடல் நலக்குறைவு காரணமாக கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் தொடர்ந்து ஓய்வில் இருந்து வந்தார். சென்னை கீழ்ப்பாக்கம் கார்டன் பகுதியில் உள்ள வீட்டில் வைத்து மருத்துவர்கள் அவரை கண்காணித்து வந்தனர். இந்நிலையில் திங்கள்கிழமை அவருக்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டது. இதையடுத்து அவர் ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவமனையில் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.