Advertisment

காஷ்மீருக்கான புதிய சட்டம்... நிறுத்திவைக்கக்கோரி திமுக அனைத்துக்கட்சி கூட்டத்தில் தீர்மானம்!

காஷ்மீர் விவகாரம் குறித்ததிமுக சார்பில் அனைத்து கட்சி கூட்டம் நடந்து முடிந்தது. இந்த கூட்டத்தில் காஷ்மீருக்கான புதிய சட்டத்தை நிறுத்திவைக்கக் கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Advertisment

 DMK alliance resolution

ஜம்மு காஷ்மீருக்கான சட்டப்பிரிவு 370, 35ஏநீக்கப்பட்ட நிலையில்சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் இக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் காங்கிரஸ், இடதுசாரிகள், விசிக, ஐஜெகே, மதிமுக ஆகிய கட்சிகள் பங்குபெற்றன.

Advertisment

கி.வீரமணி, வைகோ, தங்கபாலு, ரவிபச்சமுத்து, முத்தரசன், திருமாவளவன், ரவிக்குமார் ஆகியோர் பங்கேற்ற இந்த கூட்டத்தில்காஷ்மீருக்கான புதிய சட்டத்தை நிறுத்திவைக்கக் கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

dmk

அந்த தீர்மானத்தில்,பிரதமர் மோடியின் இரண்டாவது ஆட்சி தொடக்கத்திலேயே தரைதட்டிவிட்டது. நாடாளுமன்றத்தில் நிறைவேற்றிய பெரும்பான்மை மசோதாக்கள் ஜனநாயகத்திற்கு எதிரானவை.ஏற்கனவே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் பிரச்சனைகளுடன் மேலும் பிரச்சனைகளில் கூடிவிட்டன. இந்திய பொருளாதாரம் போன்றவற்றில் ஏற்பட்டுள்ள பின்னடைவுகளை தடுத்து நிறுத்த அரசு தவறிவிட்டது. அனைத்துக் கட்சிக் கூட்டம் மீண்டும்நடத்தப்பட்டு இரண்டாம்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

all party meeting
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe