ADVERTISEMENT

தி.மு.க.வுடன் எடப்பாடி கூட்டணி... டி.டி.வி.தினகரன் குற்றச்சாட்டு

10:59 PM Aug 26, 2018 | jeevathangavel

ADVERTISEMENT

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் இன்று டி.டி.வி. தினகரனின் அ.ம.மு.க. கட்யின் பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய எம்.எல்.ஏ. தங்க .தமிழ்செல்வன், வருகிற 31ம் தேதி வரும் 18 எம்.எல் ஏ.க்களின் தீர்ப்பு நல்ல தீர்ப்பாக அமையும். அதே போல் இரண்டு எம்.எல்.ஏ. தொகுதிகளின் இடைத்தேர்தலில் உண்மையான அ.தி.மு.க.வான அ.ம.மு.க.தான் வெற்றி பெறும் என்றார்.

ADVERTISEMENT

தொடர்ந்து பேசிய டி.டி.வி. தினகரன், தற்போது சினிமா பீல்டில் நகைச்சுவை நடிகர் வடிவேல் இல்லை. அந்த இடத்தை எடப்பாடியின் அமைச்சரவையில் உள்ள அமைச்சர்கள் செய்கிறார்கள். தி.மு.க. வுடன் காங்கிரஸ் கூட்டணியில் உள்ளதோ இல்லையோ ஆனால் தி மு.க.வுடன் எடப்பாடி கூட்டணியில் உள்ளார் என்றார்.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT