Advertisment

விவசாயிகள் போராட்டம் எதிரொலி - திமுக கூட்டணி கட்சியினர் உண்ணாவிரத போராட்டம் அறிவிப்பு!

lk

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள், டெல்லியில் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

Advertisment

டெல்லியின் புறநகர்ப் பகுதிகளில் உள்ள முக்கிய நெடுஞ்சாலைகளிலும் தொடர்ந்து 19 -ஆவது நாளாக, விவசாயிகள் பெருமளவில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இன்று காலை முதல் விவசாயிகள் உண்ணாவிரதப் போராட்டத்தைத் துவக்கியுள்ளனர். இதற்கிடையே டெல்லியின் முக்கிய சாலைகள் அனைத்திலும் விவசாயிகள் தங்கள் போராட்டங்களை முன்னெடுத்து வருகிறார்கள். இந்த போராட்டம் தற்போது வரையில் அமைதியான முறையில் சென்று கொண்டிருக்கும் நிலையில் விவசாயிகள் போராட்டத்தை ஆதரித்து நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக டிசம்பர் 18ல் திமுக தோழமைக் கட்சிகள் சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஒருநாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடைபெற உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Advertisment

farmers bill stalin
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe