Advertisment

குடியுரிமை சட்ட திருத்ததிற்கு எதிராக திமுக போர்கொடி...!

இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு குடியுரிமை வழங்கும் வகையிலான குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை இரு அவைகளிலும் உள்துறை அமைச்சர் அமித்ஷா தாக்கல் செய்தார். இதற்கு எதிர்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. மேலும் இந்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் மாணவர்கள் போராட்டம் வலுபெற்று வருகிறது.

Advertisment

 DMK against citizenship amendment bill

இந்நிலையில் இந்திய குடியுரிமை சட்ட திருத்த மசோதாவால் சிறுபான்மையினர் மற்றும் ஈழத்தமிழர்களுக்கு பா.ஜ.க மற்றும் அதிமுக துரோகம் இழைத்துவிட்டதாக கூறி விழுப்புரம் மத்திய மாவட்ட திமுக சார்பில் விழுப்புரம் நகர கழக அலுவலகத்திலிருந்து கண்டன ஊர்வலம் நடைபெற்றது. பின்னர் விழுப்புரம் பழைய பேருந்து நிலையம் அருகிலுள்ள திருவள்ளுவர் திடலில் மாவட்டச் செயலாளர் க.பொன்முடி எம்.எல்.ஏ தலைமையில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. இதில் திமுக முக்கிய நிர்வாகிகள் மற்றும் கட்சித் தொண்டர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.

Advertisment
citizenship amendment bill
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe