Advertisment

திமுக, அதிமுக வேட்பாளர்கள் போட்டியின்றித் தேர்வு! 

DMK, ADMK candidates elected without contest!

தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வரும் பிப். 19ஆம் தேதி தமிழ்நாடு முழுக்க ஒரே கட்டமாக நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனுத் தாக்கல், பரிசீலனை மற்றும் வாபஸ் வாங்கும் நடவடிக்கைகள் முடிவடைந்துள்ளன. இந்நிலையில், சில இடங்களில் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டும், வாபஸ் வாங்கும் நிகழ்வுகளும் நடைபெற்றன. இதனால், சில வார்டுகளில் வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வாகியுள்ளனர்.

Advertisment

அதன்படி, கிள்ளை பேரூராட்சி நகர்ப்புற உள்ளாட்சித்தேர்தலில் போட்டியின்றி திமுக மற்றும் அதிமுக வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வாகியுள்ளனர்.

Advertisment

DMK, ADMK candidates elected without contest!

சிதம்பரம் அருகே கிள்ளை பேரூராட்சியில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்ட 10வது வார்டு திமுக வேட்பாளர் மல்லிகா, 3வது வார்டில் அதிமுக சார்பில் போட்டியிட்ட அறிவழகன் ஆகியோரை எதிர்த்து வேட்புமனு தாக்கல் செய்தவர்கள் வேட்பு மனுவை வாபஸ் பெற்றதால் திங்கள்கிழமை மாலை கிள்ளை பேரூராட்சி தேர்தல் நடத்தும் அலுவலர் இவர்கள் இருவரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளனர்.

Chidambaram admk
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe