Skip to main content

தென் மாவட்ட தி.மு.க. நிர்வாகிகள் மாற்றம்: அதிருப்தியில் உ.பி.க்கள்

Published on 03/07/2018 | Edited on 03/07/2018
anna arivalayam


மதுரை, தேனி, சிவகங்கை, ராமநாதபுரம், நெல்லை, தூத்துக்குடி என்று 7 மாவட்ட தி.மு.க.வின் நிர்வாகிகள் மாற்றப்பட்டுள்ளனர். இதில் குறிப்பாக, நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் மட்டும், 12 நிர்வாகிகள். குறிப்பாக நெல்லை மாவட்டத்தில் மட்டும் 9 நிர்வாகிகள் அடங்குவர்.
 

நெல்லை மே. மா. தி.மு.க. குருவிகுளம் வடக்கு ஆலங்குளம் வடக்கு மேலநீலிதநல்லூர் ஒன்றியங்கள். சங்கரன்கோவில் நகர செ. சங்கரன் போன்றவர்கள் நீக்கப்பட்டு புதிய நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டுள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு மேல நீலிதநல்லூர் தி.மு.க. சார்பில் ஒன்றிய செ.வான ராஜா தலைமையில் முக்கிய விழாவும் நடத்தப்பட்டது. தற்போது அவர் மாற்றப்பட்டு அப்பதவியில் டி.விஜயகுமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

 

 

 

 

இந்த நிலையில் நெல்லை மே. மாவட்ட தி.மு.க.வில் இரண்டு அணியாகச் செயல்படுகின்றனர். இந்த விசயம் தி.மு.க.வின் தொண்டர்கள் தரப்பிலிருந்து அறிவாலயத்திற்குப் பல புகார்கள் போயுள்ளன. மனுக்களும் அனுப்பப்ட்டுள்ளன.
 

மாவட்டம் தோறும் கட்சி நிர்வாகிகளை நேரில் அழைத்து கட்சியின் செயல்பாடுகள் குறைகளை நேரில் கள ஆய்வு செய்தார் ஸ்டாலின். ஆய்வுகளை மேற் கொண்டார். இந்தக் கூட்டத்தில் நெல்லை மேற்கு மற்றும் கிழக்கு மாவட்டம் சார்பில் பங்கேற்ற முக்கிய நிர்வாகிகள் கட்சிக்குள் நடக்கும் பல் வேறு புகாரினைக் கட்சித் தலைமைக்குத் தெரிவிக்க இருந்த நிலையில் அதற்கான சந்தர்ப்பம் தலைமையால் வழங்கப்படவில்லை என்று பேச்சு அப்போதே மாவட்டத்தில் கிளம்பியது அதேசமயம் மாவட்டங்களில் அதிரடி மாற்றங்கள் இருக்கும் என்ற கருத்தும் கட்சியினர் மத்தியில் பரவியது.
 

அதற்கு ஏற்ப நெல்லை மாவட்டம் முழுமையிலும் மாற்றங்கள் அதன்படி சங்கரன்கோவில் நகர செ. சங்கரன் மாற்றப்பட்டு ராஜதுரை நியமிக்கப்பட்டார் நெல்லை மத்திய மாவட்டம் மானூர் வ.ஒ. செ. அருள்மணிக்குப் பதிலாக அன்பழகன் நெல்லை கி. மாவட்ட நாங்குனேரி ஒ.செ. வானுமாமலைக்குப் பதிலாக சுடலைக்கண்ணு ராதாபுரம் ஒ.செ. கேசவனுக்கு மாற்றாக ஜெகதீசன், அம்பையின் சிவகுருநாதனுக்குப் பதிலாக பரணிசேகர். சேரன்மாதேவி ஒ.செ. ஆறுமுகத்திற்குப் பதிலாக பிரபு உள்ளிட்ட பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன கட்சித் தலைமையிலிருந்து இந்த அறிவிப்பு வெளியான ஒரு சில நிமிடங்களில் சமூக வலைத் தளங்கள் மூலம் வெளியான இந்தச் செய்தி கட்சியினருக்குத் தெரிய வந்து பரபரப்பை ஏற்படுத்தின.

 

 

 

 

கட்சித் தலைமையிடம் புகார் கெடுக்கப்பட்ட பொறுப்பாளர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படாத நிலையில் அவர்களுக் கெதிராகப் புகார் கெடுத்த நிர்வாகிகள் மீது தடாலடியாக நடவடிக்கை பாய்ந்துள்ளது. அதிர்ச்சியானது கட்சிப் பணியை சரிவர செய்யவில்லை. அதனால் மாற்றம் என்று சொல்லப்பட்டாலும், வேலை செய்யாமல் புகார்களுக்கு ஆளான மா.செக்களின் மீது நடவடிக்கை இல்லை என்கிற ஆதங்கங்கள், ர.ர.க்கள் மத்தியில் வைரலாகிறது. மேலும், கட்சியின் ஆளுமை, மீண்டும் மா.செக்களின் வசம் போகிறது. என்கிற வாதங்களும் தொண்டர்கள் மத்தியல் றெக்கை கட்டுகிறது.

 

 

 

 

இதன் எதிரொலியாய் கட்சியினர் சென்னை அறிவாலயம் சென்று தங்களின் தரப்பு விளக்கம் மற்றும் பொறுப்பாளர்கள் மீதான புகார்களையும் தர உள்ளனர் என்கிறார்கள்.
 

இது தொடர்பாக நாம் நெல்லை கி. மா. செ. ஆவுடையப்பனிடம் பேசிய போது.
 

இந்த மாற்றங்களுக்கு என் போன்ற மா.செ.க்கள் காரணமல்ல. அது முழுக்க முழுக்க தென் மாவட்டம் வந்த ஆய்வுக்குழுவினரின் விசாரணை அறிக்கை மூலமாக கட்சித் தலைமை எடுத்த முடிவு என்கிறார்.
 

ஆனாலும் புகைச்சல் அடங்கியபாடில்லை. 


 

சார்ந்த செய்திகள்