an

திமுக தலைவர் கலைஞர் காலமானதால் திருவாரூர் தொகுதி காலியாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் வரும் ஜனவரி 28ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் இன்று மாலை அறிவித்துள்ளது.

Advertisment

இதையடுத்து வேட்பாளர் நேர்காணல் குறித்து திமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் கழகத்தினருக்கு அறிவிப்பு செய்துள்ளார்.

Advertisment

வருகின்ற 28.1.2019 அன்று நடைபெறவுள்ள 168.திருவாரூர் சட்டப்பேரவை தொகுதிக்கான இடைத்தேர்தலில் போட்டியிட விரும்பின்றவர்கள் அதற்கான விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து, 2.1.2019 புதன்கிழமை காலை 10 மணி முதல் 3.1.2019 வியாழக்கிழமை அன்று மாலை 6 மணிக்குள், அண்ண அறிவாலயத்திலுள்ள கழக அலுவலகத்தில் ஒப்படைக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

வேட்பாளர் நேர்காணல் 4.1.2019 வெள்ளிக்கிழமை அன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்தில் மாலை 5 மணியளவில் நடைபெறும் என்றும், வேட்பாளர் விண்ணப்பக் கட்டணம் - 25,000 என்றும், தலைமைக்கழகத்தில் 1.1.2019 காலை 10 மணி முதல் விண்ணப்ப படிவம் ஒன்றுக்கு ஆயிரம் வீதம் செலுத்தி பெற்றுக்கொள்ளலாம் என்றும் அறிவித்துள்ளார்.

Advertisment