சுபஸ்ரீயின் மரணத்தை தொடர்ந்து பேனர் கலாசாரத்தை ஒழிக்க வேண்டும் என்று கட்சியினருக்கு திமுக தலைவர் வேண்டுகோள் விடுத்தார். தி.மு.க. மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினும் இதையே கட்சியினருக்கு வலியுறுத்தினார். இந்நிலையில், பட்டாசு வெடிக்கும் கலாசாரத்தையும் வேண்டாம் என நினைக்கிறேன் என்று கட்சியினரிடையே தெரிவித்துள்ளார் உதயநிதி.

கரூர் வேலாயுதம்பாளையத்தில் தி.மு.க. இளைஞரணி சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய உதயநிதி ஸ்டாலின், ‘’பொதுமக்களுக்கு இடையூறாக பிளக்ஸ் பேனர் வைக்காதீர்கள் என்ற தி.மு.க. தலைவரின் கட்டளையை தொண்டர்கள் ஏற்றுக் கொண்டு கடைபிடித்து வருவதற்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். மேலும், பட்டாசு வெடிக்கும் கலாசாரத்தையும் வேண்டாம் என நினைக்கிறேன். அது சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் விதமாக இருக்கிறது. எனவே சுற்றுச்சூழலை பாதுகாக்கும் பொருட்டு அதனையும் பின்பற்றுங்கள்’’என்று கேட்டுக்கொண்டுள்ளார்.