திமுக சட்டமன்ற உறுப்பினர் செந்திபாலாஜி முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

கரூரில் இருந்து 26 கி.மீ. தொலைவில் உள்ள ராமேஸ்வரபட்டியில் உள்ள செந்தில்பாலாஜியின் வீட்டில் சென்னை போலீஸ் விசாரணை வருகின்றனர். செந்தில் பாலாஜி வீட்டில் இல்லாததால் அவரின் தந்தை வேலுச்சாமி, தாய் பழனியம்மாள் ஆகியோரிடம் விசாரணை நடத்தினர்.

செந்தில் பாலாஜி போக்குவரத்துதுறை அமைச்சராக இருந்த போது மோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து டிஎஸ்பி தலைமையிலான போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். தகவலறிந்த செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்கள் அவரது வீடு முன்பு குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

dmj party senthil balaji mla bail petition chennai high court

Advertisment

Advertisment

2011-15 கால கட்டத்தில் போக்குவரத்து அமைச்சராக செந்தில் பாலாஜி இருந்தபோது, போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாக 16 பேரிடம் ரூ.95 லட்சம் மோசடி செய்ததாக அவரது நண்பர் கணேஷ்குமார் மத்திய குற்றப்பிரிவில் புகார் கூறியிருந்தார். அதனடிப்படையில் போலீசார் இந்த சோதனையை மேற்கொண்டுள்ளனர்.

இதனிடையே சென்னை மந்தைவெளியில் இருக்க கூடிய செந்தில்பாலாஜிக்கு சொந்தமான இரண்டு அடுக்கு மாடி வீட்டில் சோதனை நடத்த போலீசார் சென்றபொழுது, அங்கு வீடு பூட்டப்பட்டிருந்தது. வீட்டில் செந்தில்பாலாஜி இல்லாத நிலையில் வீட்டிற்குள்ளே வேறு யாரும் நுழையக்கூடாது என்பதற்காக மத்திய குற்றப்பிரிவு போலீசார் வீட்டிற்கு சீல் வைத்தனர். இந்த சோதனையில் சில முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு இருப்பதாக போலீசார் தரப்பில் சொல்லப்படுகிறது.

பல்வேறு இடங்களில் அதிகாரிகள் சோதனை செய்து வரும் நிலையில், திமுக சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு திங்கள்கிழமை அன்று விசாரிக்கப்படும் என்று உயர்நீதிமன்ற நீதிபதி சேஷசாயி அறிவித்துள்ளார்.