பசும்பொன் உ.முத்துராமலிங்க தேவரின் திருவுருவ படத்திற்கு தலைவர்கள் மரியாதை

dmdk

சென்னை கோயம்பேட்டிலுள்ள தேமுதிக தலைமை கழகத்தில் இன்று (30.10.2018) பசும்பொன் உ.முத்துராமலிங்க தேவரின் 111-வது ஜெயந்தி விழா மற்றும் 56வது குரு பூஜை விழாவை முன்னிட்டு தேமுதிக கழக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பசும்பொன் உ.முத்துராமலிங்க தேவரின் திருவுருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் துணை செயலாளர்கள் எல்.கே.சுதீஷ், ப.பார்த்தசாரதி, சார்பு அணி நிர்வாகிகள், மாவட்ட கழக செயலாளர்கள் மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் அவர்களின் 55ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி 30-10-2018 செவ்வாய்க்கிழமை காலை 10 மணியளவில் சென்னை, நந்தனத்தில் அமைந்துள்ள அவரது திருவுருவச்சிலைக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், விவேக், அமைச்சர் ஜெயக்குமார், தமாகா ஞானதேசிகன், ஜெ.தீபாவின் கணவர் மாதவன் ஆகியோர் மாலை அணிவித்து மலர் வணக்கம் செய்தனர்.

gkmani

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 111-ஆவது பிறந்த நாள் மற்றும் 55 -ஆவது நினைவுநாளையொட்டி பசும்பொன் கிராமத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி மலர் மரியாதை செலுத்தினார். பா.ம.க. பொருளாளர் திலகபாமா உள்ளிட்ட நிர்வாகிகளும் மரியாதை செலுத்தினார்கள்.

mkstalin

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 111-ஆவது பிறந்த நாள் மற்றும் 55 -ஆவது நினைவுநாளையொட்டி பசும்பொன் கிராமத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

dmdk
இதையும் படியுங்கள்
Subscribe