Advertisment

கட்சி தலைமை மீதான அதிருப்தி.. கூண்டோடு தி.மு.க.வுக்கு தாவிய தே.மு.தி.க. நிர்வாகிகள்!

The DMK, led by Chief Minister MK Stalin, joined the DMK. Administrators!

திண்டுக்கல் மாவட்டத்தைப் பொருத்த வரை தே.மு.தி.க.வில் கிழக்கு, மேற்கு மாவட்டம் என இரண்டு மாவட்டச் செயலாளர்கள் உள்ளனர்.

Advertisment

இதில், மேற்கு மாவட்டத்தில் உள்ள வேடசந்தூர், ஒட்டன்சத்திரம், பழனி ஆகிய மூன்று சட்டமன்றத் தொகுதிகளிலும் தே.மு.தி.க.வின் கட்சி வளர்ச்சி, தி.மு.க., அ.தி.மு.க.வுக்கு அடுத்தபடியாக இருந்து வந்தது. அந்தளவுக்கு மேற்கு மாவட்டச் செயலாளர் எஸ்.ஆர்.கே.பாலு கட்சியை வளர்த்தும் கட்சி பொறுப்பாளர்கள் மத்தியில் நல்ல பெயர் வாங்கி வந்தார். அதுபோல் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், கட்சியின் பொருளாளர் பிரேமலதா ஆகியோரிடம் நல்ல பெயர் எடுத்து வந்தார். ஆனால் ஒவ்வொரு தேர்தலின் போது தலைமை கூட்டணியில் சரிவர ஒரு நிலைப்பாட்டை எடுக்காததைக் கண்டு மேற்கு மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.கே.பாலு உள்பட பெரும்பாலான மாவட்டச் செயலாளர்கள் மனவருத்தத்தில் இருந்தார்கள்.

Advertisment

எனினும், தலைமையின் முடிவுப்படி கட்சி பொறுப்பாளர்களும் தேர்தல் களத்தில் போட்டியிட்டு வந்தனர். அப்படி இருந்தும் கூட வெற்றி என்பது தே.மு.தி.க.வை பொருத்தவரை எட்டாக் கனியாக தான் இருந்து வந்தது. இந்த நிலையில் தான் திண்டுக்கல் மேற்கு மாவட்டச் செயலாளரான எஸ்.ஆர்.கே.பாலு தலைமையில் மாவட்டப் பொருளாளர் சங்கர், துணைச் செயலாளரான வேலுச்சாமி. பிரபாகரன் உள்பட 50- க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் திடீரென தே.மு.தி.க.வில் இருந்து விலகி தி.மு.க.வின் தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தனர்.

இதுகுறித்து நம்மிடம் எஸ்.ஆர்.கே.பாலு கூறுகையில், "நான் 17 வருடமாக தே.மு.தி.க.வில் இருந்து மேற்கு மாவட்டத்தில் கட்சியே வளர்த்து வந்தேன். இதற்காக பல லட்சங்களையும் செலவு செய்திருக்கிறேன். ஆனால் ஒவ்வொரு தேர்தலின் போது தலைமை கூட்டணியை முறையாக கையாளுவது கிடையாது. ஆனால் மாவட்டச் செயலாளர்கள் முடிவுபடி தான் தலைமை செயல்படும் என்று கூட்டத்தில் பேசினாலும்கூட தலைமை, அதுபடி நடப்பதில்லை.

10 வருடங்களுக்கு முன்பு முன்னாள் முதலமைச்சர் தலைவர் கலைஞர் அவர்கள் தே.மு.தி.க வுடன் கூட்டணி வைக்க கேப்டனை அழைத்தார். அதற்கும் முட்டுக்கட்டை போட்டு விட்டனர். அதைத் தொடர்ந்து ஒவ்வொரு தேர்தலின் போது நடக்கும் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் தி.மு.க. பக்கம் நாம் கூட்டணி வைத்தால் தான் கட்சியையும், வளர்க்க முடியும் கட்சிக்காரர்களுக்கு மரியாதை கிடைக்கும் என்று என்னை போல பல மாவட்டச் செயலாளர்கள் எடுத்துக்கூறியும் இருக்கிறோம்.

ஆனால் அதையெல்லாம் தலைமை கண்டு கொள்ளவே இல்லை. அதனாலேயே பெரும்பாலான பொறுப்பாளர்கள் மனம் நொந்து போய்விட்டனர். தலைமையும் நல்ல ஒரு வழியைக் காட்ட மாட்டேங்குது, அதனால நாமலே நல்ல வழியை தேடி போகலாமென்று மாவட்டத்திலுள்ள பெரும்பாலான பொறுப்பாளர்கள் என்னிடம் வலியுறுத்தி வந்தனர். இந்த விஷயம் அமைச்சர சக்கரபாணிக்குத் தெரியவே என்னிடம் தொடர்பு கொண்டு பேசினார். நானும் மற்ற பொறுப்பாளர்களும் அதற்கு சம்மதித்தோம்.

அதன் அடிப்படையில்தான் அமைச்சர் எங்களை அறிவாலயத்திற்கு அழைத்து செல்ல,முதலமைச்சர் முன்னிலையில் தான் நானும் கட்சி பொறுப்பாளர்களும் தி.மு.க.வில் இணைந்தோம். அப்போது மாற்று கட்சியிலிருந்து கழகத்தில் இணைந்தவர்களுக்கு எந்த அளவுக்கு மரியாதை கொடுக்கிறார்கள் என்பதை கண் முன்னே பார்த்தேன். நான் 2006- ல் ஒட்டன் சத்திரம் சட்டமன்ற தொகுதியில் அமைச்சர் சக்கரபாணி அவர்களை எதிர்த்து போட்டியிட்டு தோல்வியை தழுவினேன்.

அதேபோல் 2011- ல் கூட்டுறவுத்துறை அமைச்சர் எதிர்த்துப் போட்டியிட்டு தோல்வியைத் தழுவினேன் அதன்பின் 2016- ல் வேடசந்தூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டும் தோல்வியை தழுவினேன். இதையெல்லாம் முதலமைச்சர் முன்பு அமைச்சர் சக்கரபாணி அவர்கள் எடுத்துக் கூறினார். அதைக் கேட்ட முதலமைச்சரும் கூட தங்கள் வரவு நல்வர வாகட்டும் என்று கூறியதைக் கேட்டு பூரித்துப் போய் விட்டோம்" என்று கூறினார்.

dmdk
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe