'DMDK will not hesitate to contest independently' - Premalatha Vijayakanth interview

Advertisment

தேமுதிகவில் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் இன்று அக்கட்சியின் தலைமை அலுவலகமான கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

மண்டல பொறுப்பாளர்கள், மாவட்டச் செயலாளர்கள் உடனான ஆலோசனைக்குப் பிறகு பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், ''2026 தேர்தலில் தேமுதிக தனித்துப் போட்டியிடவும் தயங்காது. தேமுதிக தனித்து போட்டியா என்பது குறித்து இப்போது பதில் கூற முடியாது. கூட்டணி அமைத்து போட்டியா அல்லது தனித்து போட்டியா என்பதைகாலம்தான் முடிவு செய்யும். அதிமுகவுடன் சமூக உறவு உள்ளதா என்பது குறித்து இப்போது சொல்ல முடியாது. தங்கள்கூட்டணியில்தான் தேமுதிக உள்ளது என அதிமுககூறுவது அவர்களின் நிலைப்பாடு.விஜய பிரபாகரனுடன் சேர்ந்து விரைவில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்வேன். ஆறு மாதங்களுக்கு கட்சி வளர்ச்சி பணியில்தான் தேமுதிக கவனம் செலுத்தும்.

அதிகார குவிப்புக்கு பதில், கூட்டணி ஆட்சி மூலம் அதிகாரம் பகிர்ந்தளிக்கப்பட்டால் அதனை தேமுதிக வரவேற்கும். அதிமுகவுடன் தேமுதிக போட்ட ராஜ்யசபா சீட்டு ஒப்பந்த கடிதத்தை நாகரீகம் கருதி நாங்கள் வெளியிடவில்லை. திமுக கூட்டணிக்கு வருமாறு அழைப்பு விடுத்த செல்வப்பெருந்தகைக்கு நன்றி. தவெக தலைவர் விஜய் நடிகர் ஆவதற்கு முன்பு எங்கள் வீட்டுப் பையன். விஜய்யின் தந்தை இயக்கத்தில் பல படங்களில் விஜயகாந்த் நடித்துள்ளார். எப்பொழுதுமேவிஜய் எங்கள் வீட்டு பையன்.நாங்க கட்சி ஆரம்பித்து 20 வருடம் ஆகிவிட்டது. எனவே இப்பொழுது கட்சி ஆரம்பித்த விஜய்யிடம் தான் நீங்கள் தேமுதிக உடன் கூட்டணியாஎன்ற கேள்வியைவைக்க வேண்டும்'' என்றார்.