/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/vijaya kanth 89.jpg)
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்துக்கு கரோனா மருத்துவ பரிசோதனை செய்ததில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் சென்னை மணப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இந்த நிலையில் விஜயகாந்தின் உடல்நிலை தொடர்பாக தனியார் மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது, அதில், "தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்துக்கு செப்டம்பர் 22- ஆம் தேதி கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள விஜயகாந்தின் உடல்நிலை சீராக உள்ளது. விஜயகாந்த் முழுமையாக குணமடைந்து மருத்துவமனையில் இருந்து வீடு திரும்புவார் என எதிர்பார்க்கிறோம்". இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கரோனா அறிகுறி சரிசெய்யப்பட்டு விட்டதாக தே.மு.தி.க. தலைமைகழகம் அறிக்கை வெளியிட்டிருந்த நிலையில், மருத்துவமனை நிர்வாகம் தற்போது அறிக்கை வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Follow Us