Skip to main content

'விஜயகாந்த் பூரண உடல்நலத்துடன் இருக்கிறார்' -தே.மு.தி.க. தலைமை கழகம்!

Published on 24/09/2020 | Edited on 24/09/2020

 

dmdk vijayakanth coronavirus positive party headoffice statement

 

 

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்துக்கு கரோனா மருத்துவ பரிசோதனை செய்ததில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் சென்னை மணப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

 

இந்த நிலையில் தே.மு.தி.க. தலைமை கழகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், ஆறு மாதத்திற்கு ஒருமுறை உடல் பரிசோதனைக்காக விஜயகாந்த் மருத்துவமனை செல்வது வழக்கம். வழக்கமான பரிசோதனைக்காக தனியார் மருத்துவமனைக்கு சென்றபோது, விஜயகாந்துக்கு லேசான கரோனா அறிகுறி இருந்ததாகவும், தற்போது அது சரி செய்யப்பட்டு விட்டதாகவும் தெரிவித்துள்ளது. மேலும், விஜயகாந்த் பூரண உடல்நலத்துடன் இருப்பதாக கூறியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'அவர் என் பிள்ளை இல்லை இனி உங்களின் பிள்ளை'- பிரேமலதா விஜயகாந்த் பேச்சு

Published on 14/04/2024 | Edited on 14/04/2024
'He is not my child not your child' - Premalatha Vijayakanth speech

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத் தொடங்கியுள்ளன.

இந்நிலையில் விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் அதிமுக கூட்டணியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் விஜயபிரபாகரனுக்கு ஆதரவாக, தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா சாத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் பிரச்சாரம் செய்தார். அப்போது பேசிய அவர், '“விஜயபிரபாகரன் நினைத்திருந்தால் தமிழகத்தில் எங்கு வேண்டுமானாலும் போட்டியிட்டிருக்கலாம். அவர் இந்த மண்ணின் மைந்தன் என்பதால், நம் சொந்த பந்தங்கள் உள்ள இந்த பூமியில், இங்குள்ள மக்களுக்காக,  தன் தந்தையின் கனவைச் சுமந்து கொண்டு விருதுநகர் தொகுதியில் போட்டியிடுகிறார்.படித்தவர், பண்பாளர்,  இளைஞர், கருணை உள்ளம் கொண்டவர்,  மக்களுக்காக உழைக்க வேண்டுமென்ற நல்ல சிந்தனையோடு வந்துள்ளார்.

விஜயபிரபாகரன் என் பிள்ளை இல்லை;  இனி அவர்  உங்கள் பிள்ளை. அனைத்துத் தாய்க்குலத்தின் பிள்ளை. இன்னும் கல்யாணம் கூட ஆகல. உக்களுக்காக உழைக்க வந்திருக்கிறார். உங்கள் தலைமையில் தான் அவரது திருமணத்தை நடத்துவேன்.  எனது மகன் வெற்றி பெற்றால், தொகுதி முழுவதும் இலவச தையல் பயிற்சி மையம் அமைத்து,   பயிற்சி நிறைவு பெற்றபின், அனைவருக்கும் தையல் மிஷின் வழங்குவோம். படிக்காத, படித்த இளைஞர்களுக்கு இலவச கணினி பயிற்சி மையங்கள், தொகுதி முழுவதும் சொந்த செலவில் அமைப்போம். தீப்பெட்டி தொழிற்சாலை, பட்டாசுத் தொழிற்சாலை, ரயில்வே மேம்பாலம் உள்ளிட்ட அனைத்து பிரச்சனைகளும் தீர்வு காணப்படும். மற்ற வேட்பாளர்களைப் பற்றி நான் பேசமாட்டேன்.

மற்றவர்களைக் குறைசொல்லி அதில் ஓட்டு வாங்க வேண்டிய அவசியம் நம் கட்சிக்கு இல்லை. நான் விருதுநகர் மக்களை நம்புகிறேன்.  நாங்கள் சென்னையில் இருப்பதாக நினைக்க வேண்டாம். இனிமேல்  விருதுநகரில் தான் இருப்போம். கேப்டனை நம்பியவர்கள் கைவிடப்பட்டதாக சரித்திரம் இல்லை. குடும்ப பாரம்பரிய சொந்த பந்தம், ரத்த பந்தம் இருக்கிறது விருதுநகர் தொகுதியில், விஜயபிரபாகரன் உண்மையாக உழைத்து, மாநில அளவில் முதன்மைத் தொகுதியாக கொண்டு வருவார். தமிழகம் முழுவதும் அதிமுக - தேமுதிக கூட்டணிக்கு அமோக வரவேற்பு உள்ளது. நான் பிரச்சாரத்துக்குச் செல்லும் இடத்திலெல்லாம்,  விஜயபிரபாகரனுக்கு  பிரச்சாரம் செய்யவில்லையா என்று கேட்பார்கள்.  அவர் என் பிள்ளை இல்லை.   அங்குள்ள லட்சக்கணக்கான தாய்மார்களின் பிள்ளை.  அவர்கள் பார்த்து கொள்வார்கள் என்று சொன்னேன். உங்களை நம்பி நானும்,  கேப்டனும்,  விஜயபிரபாகரனை உங்களிடம் ஒப்படைத்திருக்கிறோம். எல்லாம் மொழியும் அவருக்கு தெரியும்.  அமைதியாக இருக்கிறார் என்று நினைக்க வேண்டாம், அவர் பயங்கர ‘ஷார்ப்’,  அறிவாளி,  நிச்சயமாக உங்களுக்காக  உழைப்பார்”என்று பேசினார். 

Next Story

'விஜயபிரபாகரனுக்கு வாக்களித்தால் கேப்டன் ஆன்மா சாந்தியடையும்' -ஆதரவு திரட்டிய தம்பி சண்முகபாண்டியன்

Published on 12/04/2024 | Edited on 12/04/2024
'Vote for Vijaya Prabhakaran, captain soul will be at peace' - brother Sanmugapandian who gathered support

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களை தொடங்கியுள்ளன.

இந்நிலையில் விருதுநகர் பாராளுமன்றத் தொகுதியில் அதிமுக கூட்டணியின் தேமுதிக வேட்பாளராகப் போட்டியிடும் அண்ணன் விஜயபிரபாகரனுக்காக தம்பி சண்முக பாண்டியன் அருப்புக்கோட்டையில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசுகையில், “இதுதான் என்னுடைய முதல் தேர்தல் பிரச்சாரம். என்னுடைய அண்ணனுக்காக நான் வந்திருக்கிறேன்.  என்னுடைய அப்பா கோவிலில் இருக்கும்போது, பலரும் கூறினார்கள்.

ஒரு முறையாவது அப்பாவை வெற்றிபெற வைத்திருக்கலாம் என்று வருத்தப்பட்டார்கள். என்னுடைய அப்பாவை வெற்றிபெற வைக்கவில்லை என்று வருத்தப்பட வேண்டாம்.‌ அச்சு அசலாக என்னுடைய அப்பா சாயலில் இருக்கும் என்னுடைய அண்ணனை வெற்றி பெறவைத்தாலும் என் அப்பா ஆத்மா சாந்தி அடையும். இந்த மக்களுக்கு என்ன பிரச்சனை உள்ளதோ, அதை என்னுடைய அண்ணன் இந்தத் தொகுதியில் இருந்து, மக்கள் பிரச்சனைகளைக் கேட்டறிந்து தீர்த்து வைப்பார். உங்கள் வீட்டுப் பிள்ளையாக,  அண்ணனாக,  மகனாக விஜய பிரபாகரன் நிற்கிறார். அவருக்காக நீங்கள் முரசு சின்னத்திலே வாக்களிக்க வேண்டும்” என்று ஆதரவு திரட்டினார்.