எடப்பாடியுடன் தேமுதிக சுதீஷ் சந்திப்பு

DMDK Sudheesh meets Edappadi

நாட்டின் 18 வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் கடந்த ஆண்டு ஏப்ரல் - மே மாதங்களில் நாடு முழுவதும் நடைபெற்றன. இந்த தேர்தலில் தமிழகத்தில் அதிமுக கூட்டணியில் தேமுதிக போட்டியிட்டது. இது தொடர்பாக அதிமுக தலைமை அலுவலகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 30ஆம் தேதி அக்கட்சியின் பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தலைமையில், தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் முன்னிலையில் அதிமுக -தேமுதிக இடையே கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது.

அதன்படி அதிமுக கூட்டணியில் தேமுதிக, திருவள்ளூர், மத்திய சென்னை, தஞ்சாவூர், விருதுநகர் மற்றும் கடலூர் ஆகிய 5 தொகுதிகளில் போட்டியிட்டது. இதற்கான ஒப்பந்தத்தில் எடப்பாடி பழனிசாமி - பிரேமலதா விஜயகாந்த் ஆகிய இருவரும் கையெழுத்திட்டனர். இத்தகைய சூழலில் தான் தமிழ்நாட்டில் 6 நாடாளுமன்ற மாநிலங்களை உறுப்பினர்களின் பதவிக்காலம் ஜூன் 24ஆம் தேதியுடன் முடிவடைய உள்ளது.

இது தொடர்பாக தேர்தல் ஆணையம்வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பின் படி, தேர்தலுக்கான அறிவிப்பு ஜூன் 2ஆம் தேதி வெளியிடப்படுகிறது. வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி ஜூன் 09ஆம் தேதி ஆகும். தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை ஜூன் 10ஆம் தேதி நடைபெறுகிறது. வேட்புமனுக்களை வாபஸ் பெறுவதற்கான கடைசி நாள் ஜூன் 12ஆம் தேதி ஆகும். வாக்கெடுப்பு ஜூன் 19ஆம் தேதி காலை 09:00 முதல் மாலை 04:00 மணி வரை நடைபெற உள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 19ஆம் தேதி (வியாழக்கிழமை) நடைபெறுகிறது.

ஒரு மாநிலங்களவை உறுப்பினர் இடத்தை தேமுதிகவிற்கு வழங்க வேண்டும் என தேமுதிக சார்பில் வலியுறுத்தப்பட்டு வரும் நிலையில் தற்போது சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் தேமுதிகவின் பொருளாளர் சுதீஷ் சந்திப்பு மேற்கொண்டுள்ளார். இந்த சந்திப்பில் தேமுதிகவிற்கு மாநில மாநிலங்களவை உறுப்பினர் இடம் வழங்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. முன்னதாக செய்தியாளர்களைச் சந்தித்திருந்த அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் 'அதிமுக தேமுதிகவிற்கு மாநிலங்களவை உறுப்பினர் இடத்தை ஒதுக்க வேண்டியது கடமை' என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தகுந்தது.

admk dmdk edappadi pazhaniswamy LK Sudeesh
இதையும் படியுங்கள்
Subscribe