
சென்னை தேமுதிக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பேசுகையில், ''சசிகலா விவகாரத்தில் அதிமுக நல்ல முடிவை எடுக்க வேண்டும் என்பது என்னுடைய கருத்து. சசிகலாவினால்ஆதாயம் அடைந்தவர்ககளே இன்றுஅவரை வேண்டாம் எனக் கூறுவது வருத்தமளிக்கிறது. அதிமுகவில் இருப்பவர்கள் நன்றாக இருக்கிறார்கள் என்றால் அதற்கு முக்கிய காரணம் சசிகலா தான்.தமிழக அரசியலில் சசிகலா பங்கேற்க வேண்டும் என்பது என்னுடைய விருப்பம்.யாருக்கு எவ்வளவு தொகுதி என்பதை கூட்டணிக்காக தலைமை பேச வேண்டும். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட உடன் பேச்சுவார்த்தை எனக்கூறுவது தாமதத்திற்கு வழிவகுத்துவிடும். கூட்டணிப் பேச்சுவார்த்தை அதிமுக உடனே தொடங்க வேண்டும், கால தாமதம் செய்யக்கூடாது''என்றார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)