Skip to main content

குறுக்கு வழியில் முன்னேறத் துடிக்கும் எண்ணம் உள்ளவர்களே.... நீட் தேர்வில் தவறு செய்கிறார்கள்!- பிரேமலதா விஜயகாந்த் பேட்டி!!

Published on 30/09/2019 | Edited on 30/09/2019

திண்டுக்கல்  மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற பழனிமுருகன் கோவிலுக்கு சென்று பிரேமலதா விஜயகாந்த் சாமி தரிசனம் செய்தார்.  காலை 08.00 மணிக்கு நடைபெற்ற பூஜையில் கலந்து கொண்ட அவர்,  பழனி முருகனை அலங்காரத்தில் தரிசனம் செய்தார். அப்போது தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கும் மற்றும் தேமுதிகவின் கட்சித் தொண்டர்களின் குடும்பங்களுக்காக பூஜை செய்தார். அதை தொடர்ந்து  மலைக் கொழுந்து அம்மன் கோவிலில் நெய்தீபம் ஏற்றி வழிபட்டார்.

dmdk premalalatha vijayakanth visit palani temple


அதன் பின் பத்திரிகையாளர்களை சந்தித்த பிரேமலதா, தேமுதிக தலைவர் விஜயகாந்த், தேமுதிக தொண்டர்கள் மற்றும் தமிழக மக்கள் அனைவரும் நலமுடன் இருக்க வேண்டும் என்று முருகனை வேண்டிக் கொண்டதாக தெரிவித்தவர். அதிமுக- தேமுதிக கூட்டணி இடைத்தேர்தல் மற்றும் உள்ளாட்சி தேர்தலிலும் தொடரும் என்றும், கஷ்டப்படாமல் குறுக்கு வழியில் முன்னேறத் துடிக்கும் எண்ணம் உள்ளவர்களே  நீட் தேர்வில் தவறு செய்கிறார்கள். நல்லமுறையில் படித்து மருத்துவராகும் மாணவர்களே சேவை மனப்பான்மையுடன் பணிபுரிவார்கள்.  


தேர்தல் நிதியாக திமுகவிலிருந்து கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு 25 கோடிரூபாய் வழங்கியதாக வரும் தகவலை திமுக தலைவர் ஸ்டாலினும், கம்யூனிஸ்ட் கட்சியினரும் தான் விளக்கம் அளிக்க வேண்டும் என்று பிரேமலதா விஜயகாந்த் தனது பேட்டியில் தெரிவித்தார். இந்த பேட்டியின் போது திண்டுக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் ஒட்டன்சத்திரம் பாலு, நகர செயலாளர் ஈஸ்வரன் மற்றும் தேமுதிக நிர்வாகிகள் ஆகியோர் உடனிருந்தனர். 
 

சார்ந்த செய்திகள்

Next Story

பிரான்ஸ் வீரர்களுக்கு தற்காப்புக்கலைகளை கற்றுக்கொடுக்கும் தமிழக வீரர்கள்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Tamil Nadu players teaching martial arts to French players

மாமல்லபுரத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் சர்வதேச மஞ்சூரியா குங்ஃபூ தற்காப்புக் கலையின் சார்பில் இந்தோ பிரான்ஸ் தற்காப்புக் கலை சிறப்பு பயிற்சி முகாம் பிரான்ஸில் நடைபெற்று வருகிறது.

பிரான்ஸ் நாட்டின் ஃபெவ்ரி நகரில் மாஸ்டர் ஷி ஷிஃபூ மேத்யூ  தலைமையில் ஏப்ரல் 22 துவங்கி 28 வரை 7 நாட்கள் நடைபெற்று வரும் இந்தச் சிறப்பு பயிற்சி முகாமில் கல்பாக்கம் அணுபுரத்தைச் சேர்ந்த மாஸ்டர் சந்தோஷ், திண்டுக்கல் மாவட்டம் பழனி நாகூரைச் சேர்ந்த யோகா மாஸ்டர் பிரகாஷ் ஆகிய இருவரும், பிரான்ஸ் நாட்டு வீரர்களுக்கு  குங்ஃபூ தற்காப்புக் கலை, தெக்கன் களரி சிலம்பக்கலை, பதஞ்சலி ஹத யோகா, ஆகியவற்றை கற்பித்து வருகின்றார்கள். நேற்று யோகா குறித்து விளக்கம் அளித்து அதை செய்தும் காண்பித்துள்ளார்கள்.

Next Story

தேமுதிக ஒன்றிய செயலாளரை தாக்கிய அதிமுக ஒன்றிய செயலாளர்!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
AIADMK union secretary attacked DMK union secretary in Karur!

கரூர் மாவட்டத்தில் தேமுதிக  ஒன்றிய செயலாளரை கூட்டணியில் உள்ள அதிமுக ஒன்றிய செயலாளர் தாக்கியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் மாவட்டம் கடவூர் தேமுதிக தெற்கு ஒன்றிய  செயலாளரும் முன்னாள் கவுன்சிலருமான ஆல்வின் என்பவர் பாலவிடுதி காவல் நிலையம் அருகே தன் கட்சி நிர்வாகிகளுடன் பேசிக்கொண்டு இருக்கையில் அவ்வழியே வந்த அதிமுகவைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் வேண்டுமென்றே ஆல்வின் இடம் வாய் தகராறு செய்துள்ளார்.

இதற்கு ஆல்வின் சாதாரணமாக பதில் அளித்ததையடுத்து ஏற்கனவே தேர்தல் பணப்பட்டுவடாவில் ஏற்பட்ட பகையில் அதிமுக கடவூர் தெற்கு ஒன்றிய செயலாளரும் மாவட்ட கவுன்சிலருமான ரமேஷ் நேரடியாக சம்பவ இடத்திற்கு வந்து காவல் நிலையம் முன்பே கொலை செய்யும் நோக்கோடு ரமேஷ் ஆல்வினை தாக்கி உள்ளார். இதனால் படுகாயம் அடைந்த ரமேஷ் மேல் சிகிச்சைக்காக கரூர் அரசு தலைமை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இது குறித்து பாதிக்கப்பட்ட ஆல்வின் கூறுகையில், கொலைவெறி தாக்குதல் நடத்திய அதிமுக கவுன்சிலர் ரமேஷை மாவட்ட காவல்துறை கைது செய்திட வேண்டும். அவரை குண்டர் சட்டத்தில் அடைத்திட வேண்டும். அதிமுக, தேமுதிக கூட்டணியில் இருந்தும் அதிமுகவினர்  தாக்குதல் நடத்தி உள்ளனர். இதனால் தான் பெரும் அளவில் மன உளைச்சல் அடைந்ததாகவும் இதற்கு அதிமுக தலைமை பதில் சொல்லியே ஆக வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். தேர்தல் முடிந்ததும் கூட்டணி முடிந்தது போல அதிமுகவினர் தங்கள் வேலையை காட்ட துவங்க உள்ளனர் என பாதிக்கப்பட்டவருடன் வந்த தேமுதிக நிர்வாகிகள் வேதனையுடன் புலம்பினர்.