கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் உடல் மயானத்திற்கு எடுத்து செல்லப்படுகின்றன. ஆனால் மயானத்திற்கு அருகில் வசிக்கும் பொதுமக்கள் தகவல் அறிந்து, இறந்தவர்களின் உடலை தகனம் செய்யவிடாமல் தடுத்து காவல்துறையினரிடம் வாக்குவாதம் செய்கின்றன. இதுபோன்ற சம்பவங்கள் தொடரும் நிலையில், தேமுதிக கட்சியின் பொதுச்செயலாளர் விஜயகாந்த் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
அதில் "கரோனாவால் இறந்தால் உடலை அடக்கம் செய்ய, ஆண்டாள் அழகர் கல்லூரியின் ஒருபகுதியை தருவதாக விஜயகாந்த் அறிவித்துள்ளார். மேலும் கரோனாவால் இறந்தவரை அடக்கம் செய்வதால் பாதிப்பு ஏற்படாது என்பதை அரசு புரிய வைக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.