விஜயகாந்த் சினிமாவில் அன்று! நிஜத்தில் இன்று!- சட்ட விளையாட்டில் சறுக்கல்! 

“சட்டம் ஒரு விளையாட்டாக இருக்கக்கூடாது.” என்று திரையில் தோன்றி பேசும் கலைஞர் “இக்கருத்தோவியம் நல்லவருக்குப் பரிசாகவும் நயவஞ்சகருக்குப் பாடமாகவும் அமைய வேண்டும்.” என்பார், விஜயகாந்த் கதாநாயகனாக நடித்த சட்டம் ஒரு விளையாட்டு என்ற திரைப்படத்தில் சட்டத்தை வைத்து விளையாடக்கூடாது எனத் திரையில் அன்று வசனம் பேசினார், ‘ஹீரோ’ விஜயகாந்த். இன்றோ, சென்னை உயர்நீதிமன்றம் ‘எதிர்க்கட்சிகள் எப்படி செயல்பட வேண்டும் என துணைக் குடியரசுத் தலைவர் கூறியுள்ளார். எதிர்க்கட்சி தலைவராக இருந்த விஜயகாந்த் பேசிய பேச்சுகள் அவதூறானவையே. அரசியல் சூழ்நிலைகளைப் பற்றி விவாதிக்க இது இடமில்லை.

dmdk party president vijayakanth film compare to  chennai high court

மேல்முறையீட்டு மனுவில் கடுமையான குற்றச்சாட்டுகளைக் கூறிவிட்டு, தற்போது வழக்கை வாபஸ் பெற அனுமதி கேட்பது, நீதிமன்ற நேரத்தை வீணடிப்பது போன்றது என்பதால் அபராதமே விதிக்கலாம். எதிர்காலத்தில் இதுபோல் செயல்படக் கூடாது.” என்று ‘அரசியல்வாதி’விஜயகாந்துக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

சினிமாவில் மட்டுமல்ல. நிஜத்திலும், சட்டம் ஒரு விளையாட்டு அல்லவே!

chennai high court DMDK PARTY PRESIDENT VIJYAKANDH film
இதையும் படியுங்கள்
Subscribe