Advertisment
தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நாளை மறுநாள் (07/11/2019) நடைபெறும் என்று தேமுதிக தலைமை அறிவித்துள்ளது.சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக கட்சியின் தலைமை அலுவலகத்தில், கட்சியின் தலைவரும், பொதுச்செயலாளருமான விஜயகாந்த் தலைமையில் நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் குறித்து விவாதிக்கவும், கட்சியின் வளர்ச்சி பணிகள் குறித்து விவாதிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.