தேமுதிக கட்சித் தலைவர் விஜயகாந்த், கடந்த 2012ம் ஆண்டு தர்மபுரியில் நடந்த பொதுக்கூட்டத்தில் அவதூறாக பேசியதாக, அப்போதைய உள்ளாட்சித்துறை அமைச்சர் கே.பி.முனுசாமி சார்பில், விஜயகாந்த் மீது அவதூறு வழக்கு தொடரப்பட்டது.

Advertisment

இந்த வழக்கின் விசாரணை, தர்மபுரி மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. புதன்கிழமை (நவ. 27) இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. விஜயகாந்த், விசாரணைக்கு ஆஜராகவில்லை. இதையடுத்து, வழக்கு விசாரணையை வரும் 2020ம் ஆண்டு, பிப்ரவரி 20ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி கந்தகுமார் உத்தரவிட்டார்.

dmdk party leader vijayakanth case postponed  dharmapuri district court

அதேபோல், கடந்த 2015ம் ஆண்டில், தர்மபுரியில் நடந்த பொதுக்கூட்டத்தில், ஜெயலலிதாவை அவதூறாக பேசியதாக விஜயகாந்த் மீது தொடரப்பட்ட வழக்கும், தர்மபுரி மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கின் விசாரணையையும் அடுத்த ஆண்டு பிப். 20ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி கந்தகுமார் உத்தரவிட்டுள்ளார்.இந்த வழக்கில் அரசுத்தரப்பில் வழக்கறிஞர் பசுபதியும், விஜயகாந்த் தரப்பில் வழக்கறிஞர் காவேரி வர்மனும் ஆஜராகினர்.