Advertisment

முகக்கவசம் அணிந்து செல்ஃபி எடுப்போம்... ஸ்டேடஸில் வைப்போம்... விழிப்புணர்வு ஏற்படுத்த விஜயகாந்த் அழைப்பு!

கரோனாவுக்கு எதிராக முகக்கவசம் அணிந்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது குறித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Advertisment

dmdk - vijayakanth - coronavirus awareness -

அதில், கரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் தமிழகத்தில் கொரோனா வைரஸுக்கு எதிராக ஊரடங்கு அமலுக்கு வந்து ஒரு மாதம் முடிந்து மே 3- ஆம் தேதி வரைக்கும் நீட்டிக்கப்பட்டுள்ள இந்தக் காலகட்டத்தில் மக்களிடையே மேலும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஒட்டுமொத்த தமிழக மக்களும், தேசிய முற்போக்குத் திராவிட கழகத்தைச் சேர்ந்த கழக நிர்வாகிகள் முதல் தொண்டர்கள் வரை அனைவருமே, அவரவர்கள் முகத்தில் முகக்கவசம் (Mask) அணிந்து மொபைல் போனில் செல்ஃபி (Selfi) படம் எடுத்து டிபியாக (Dp) பதிவிட்டும், அதைச் சமூக வலைத்தளங்களில் (Whatsapp DP, Status, Facebook, Instagram, Twitter)பதிவிட்டும் முகக்கவசத்தின் அவசியத்தை வலியுறுத்தும் வண்ணம் விழிப்புணர்வு பிரச்சாரத்தை நாம் அனைவரும் ஒன்றிணைந்து ஏற்படுத்த வேண்டும் எனத் தமிழக மக்களையும், தேமுதிக தொண்டர்களையும் கேட்டுக் கொள்கிறேன். மேலும் இந்த விழிப்புணர்வு புகைப்படத்தை மே 3- ஆம் தேதி வரை அவரவர்கள் மொபைலில் டிபியாக (Dp) வைத்து தொடர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்திட வேண்டும். ஒன்றிணைவோம்! வென்றிடுவோம்!! இவ்வாறு கூறியுள்ளார்.

dmdk awareness coronavirus vijayakanth
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe