Advertisment

விஜயகாந்த் மகனுக்கு நிச்சயதார்த்தம்... மணப்பெண் யார் தெரியுமா? வெளியான தகவல்!

நடிகரும், தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இதில் மூத்த மகன் விஜய பிரபாகரனுக்கும் கோவை தொழிலதிபர் மகள் கீர்த்தானவுக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. நடந்த முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தேமுதிக கட்சி சார்பாக விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் பிரச்சாரம் மேற்கொண்டார். தேமுதிக தொண்டர்கள் மத்தியில் விஜயபிரபாகரனின் பிரச்சாரம் நல்ல வரவேற்பை பெற்றது.

Advertisment

dmdk

dmdk

dmdk

இந்த நிலையில் கோவை பெரிய நாயக்கன் பாளையத்தைச் சேர்ந்த ஸ்டாம்ப்வெண்டர் இளங்கோவின் மகளுடன் அவருக்கு நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. அந்தப் புகைப்படங்கள் தற்போது வெளியாகி உள்ளது. இந்த நிகழ்ச்சியில், நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே கலந்துகொண்டு எளிமையாக நடத்தியதாக சொல்லப்படுகிறது. மேலும் சென்னை ஸ்மேசர்ஸ் பேட்மிண்டன் அணியின் உரிமையாளராகவும் இருக்கிறார் என்பது குறிப்படத்தக்கது. இவர்களது திருமண தேதியை விரைவில் தேமுதிக கட்சியின் பொருளாளரும், விஜயகாந்தின் மனைவியுமான பிரேமலதா அறிவிப்பார் என்று கூறுகின்றனர்.

Advertisment

dmdk function marriage vijayakanth vijayaprabakaran
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe