Skip to main content

தேமுதிக மாவட்ட செயலாளாின் தங்கைக்கு அாிவாள் வெட்டு;கணவர் ரயில் தண்டவாளத்தில் தற்கொலை!!

Published on 01/10/2018 | Edited on 01/10/2018

குமாி தேமுதிக மாவட்ட செயலாளாின் தங்கையை அாிவாளால் வெட்டி தலைமறைவாக இருந்த கணவா் கா்நாடகாவில் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்த சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

குமாி கிழக்கு மாவட்ட தே.மு.தி.க செயலாளா் ஜெகநாதன். இவருடைய தங்கையான அரசு கல்லூாி பேராசிாியை ஜெகதீஷ் சைனி(33) இவருடைய கணவா் கனகப்பபுரத்தை சோ்ந்த வழக்கறிஞா் டால்டன் எட்வா்ட்(40) இவா்களுக்கு ஆதவன்(4) ஆதிரை(2) என்ற இரண்டு குழந்தைகள் உள்ளன.

 

attack

 

இந்தநிலையில்  கடந்த இரண்டு ஆண்டுகளாக கணவன் மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு வருவது வழக்கம் .அப்போதெல்லாம்  ஜெகதீஷ் சைனி குழந்தைளை தூக்கி கொண்டு வோ்கிளம்பியில் உள்ளாா் தாயாா் வீட்டிற்கு வந்து விடுவாா் . பின்னா் ஊா் பிரமுகா் பேசி இருவரையும்  சமாதானப்படுத்தி சோ்த்து வைப்பாா்கள். இப்படி கடந்த இரண்டு ஆண்டுகளில் மூன்று முறை இருவரும் பிாிந்து சோ்ந்திருக்கிறாா்கள்.

            

 

இந்த நிலையில் கடந்த 29-ம் தேதி காலையில் வழக்கம் போல் கணவன் மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த டால்டன் எட்வாா்ட் அாிவாளை எடுத்து  மனைவி ஜெகதீஷ் சைனியின் தலையில் வெட்டியுள்ளாா். இதில் படுகாயம் அடைந்த  ஜெகதீஷ் சைனி ரத்த வெள்ளத்தில் தரையில் விழுந்து துடிதுடித்தாா். உடனே டால்டன் எட்வாா்டு அங்கிருந்து தலைமறைவானாா்.இதை அந்த பகுதியில் விளையாடி கொண்டிருந்த சிறுவா்கள் பாா்த்து சத்தம் போட்டதையடுத்து பக்கத்தில் உள்ளவா்கள்  ஜெகதீஷ் சைனியை மீட்டு நாகா்கோவிலில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா். பின்னா் அங்கிருந்து திருவனந்தபுரம் தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். 

 

attack

 

இது குறித்த அஞ்சுகிராமம் போலிசாா் வழக்கு பதிவு செய்து விசாாித்து டால்டன் எட்வாா்டை தேடி வந்த நிலையில் நேற்று கா்நாடகா மாநிலம் மண்டியா அருகில் எலியூா் ரயில் தண்டாவாளத்தில் வந்த ரயில் மீது பாய்ந்து டால்டன் எட்வாா்டு தற்கொலை செய்து கொண்டாா்.இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சார்ந்த செய்திகள்

Next Story

தேமுதிக ஒன்றிய செயலாளரை தாக்கிய அதிமுக ஒன்றிய செயலாளர்!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
AIADMK union secretary attacked DMK union secretary in Karur!

கரூர் மாவட்டத்தில் தேமுதிக  ஒன்றிய செயலாளரை கூட்டணியில் உள்ள அதிமுக ஒன்றிய செயலாளர் தாக்கியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் மாவட்டம் கடவூர் தேமுதிக தெற்கு ஒன்றிய  செயலாளரும் முன்னாள் கவுன்சிலருமான ஆல்வின் என்பவர் பாலவிடுதி காவல் நிலையம் அருகே தன் கட்சி நிர்வாகிகளுடன் பேசிக்கொண்டு இருக்கையில் அவ்வழியே வந்த அதிமுகவைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் வேண்டுமென்றே ஆல்வின் இடம் வாய் தகராறு செய்துள்ளார்.

இதற்கு ஆல்வின் சாதாரணமாக பதில் அளித்ததையடுத்து ஏற்கனவே தேர்தல் பணப்பட்டுவடாவில் ஏற்பட்ட பகையில் அதிமுக கடவூர் தெற்கு ஒன்றிய செயலாளரும் மாவட்ட கவுன்சிலருமான ரமேஷ் நேரடியாக சம்பவ இடத்திற்கு வந்து காவல் நிலையம் முன்பே கொலை செய்யும் நோக்கோடு ரமேஷ் ஆல்வினை தாக்கி உள்ளார். இதனால் படுகாயம் அடைந்த ரமேஷ் மேல் சிகிச்சைக்காக கரூர் அரசு தலைமை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இது குறித்து பாதிக்கப்பட்ட ஆல்வின் கூறுகையில், கொலைவெறி தாக்குதல் நடத்திய அதிமுக கவுன்சிலர் ரமேஷை மாவட்ட காவல்துறை கைது செய்திட வேண்டும். அவரை குண்டர் சட்டத்தில் அடைத்திட வேண்டும். அதிமுக, தேமுதிக கூட்டணியில் இருந்தும் அதிமுகவினர்  தாக்குதல் நடத்தி உள்ளனர். இதனால் தான் பெரும் அளவில் மன உளைச்சல் அடைந்ததாகவும் இதற்கு அதிமுக தலைமை பதில் சொல்லியே ஆக வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். தேர்தல் முடிந்ததும் கூட்டணி முடிந்தது போல அதிமுகவினர் தங்கள் வேலையை காட்ட துவங்க உள்ளனர் என பாதிக்கப்பட்டவருடன் வந்த தேமுதிக நிர்வாகிகள் வேதனையுடன் புலம்பினர்.

Next Story

மதுபோதையில் பேருந்தின் கண்ணாடி உடைப்பு; போலீசார் விசாரணை

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Bus window breaking in drunkenness; Police investigation

உளுந்தூர்பேட்டை அருகே மது போதையில் சாலையில் சென்று கொண்டிருந்த அரசு பேருந்தின் கண்ணாடியை இரண்டு இளைஞர்கள் உடைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள ஒலையனூர், குணமங்கலம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் உளுந்தூர்பேட்டை சாலையில் இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். அப்போது வாகனத்தில் யார் முந்தி செல்வது என்பதில் போட்டி ஏற்பட்டுள்ளது. மது போதையில் இருந்த இரண்டு இளைஞர்களும் ஒருவரை ஒருவர் முந்திக்கொண்டு சென்றனர். அப்போது அவர்கள் இருவரும் ஒலையனூர் பேருந்து நிலையம் அருகே சென்ற போது, போதை ஆசாமி இருவருக்கும் வாக்கு வாதம் முற்றியுள்ளது. இதனால் இளைஞர்கள் இருவரும் மோதிக்கொண்டுள்ளனர். அப்போது அந்த வழியாக வந்த எஸ்சிடிசி பேருந்தை தடுத்து நிறுத்திவிட்டு மோதலில் ஈடுபட்டனர்.

இதனால் ஆத்திரமடைந்த பேருந்து ஓட்டுனர் அந்தப் பேருந்தை அங்கிருந்து எடுத்துச் செல்ல முயன்றுள்ளார். உடனே அந்தப் போதை ஆசாமிகள் இருவரும் அங்கிருந்த கற்களை எடுத்து பேருந்தின் முன் கண்ணாடியை உடைத்தனர். மேலும் அவர்களுக்குள் சரமாரியாக தாக்கி கொண்டனர். இதில் மூன்று இளைஞர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. கோயம்புத்தூரில் இருந்து 40க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றி வந்த அந்தப் பேருந்து கண்ணாடி உடைக்கப்பட்டதால் பேருந்து அங்கேயே நிறுத்தப்பட்டது.

இது தொடர்பாக குணமங்கலம், ஒலையனூர் பகுதிகளில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மது போதையில் சாலையில் சென்ற பேருந்தை வழிமறித்து கண்ணாடியை உடைத்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.