Advertisment

கொடிக் கம்பத்தில் மின்சாரம் தாக்கி தேமுதிக நிர்வாகி உயிரிழப்பு; பலர் படுகாயம்

dmdk executive lose their live after being electrocuted on flagpole; Many were seriously injured

நடிகரும் தேமுதிகவின் தலைவருமான மறைந்த விஜயகாந்தின் 71வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதற்காக தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் தேமுதிகவினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Advertisment

இந்நிலையில் கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் விஜயகாந்த் பிறந்தநாள் விழா ஏற்பாட்டின் போது கொடிக்கம்பத்தில் மின்சாரம் தாக்கி தேமுதிக நிர்வாகி ஒருவர் உயிரிழந்தது பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.

Advertisment

கடலூர் மாவட்டம் பண்ருட்டி நடுக்குப்பம் கிராமத்தில் விஜயகாந்த் பிறந்தநாளுக்காக கொண்டாட்ட ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்பொழுது உயர் மின்னழுத்த கம்பியில் கொடிக் கம்பம் உரசியதில் வெங்கடேசன் என்ற தேமுதிக நிர்வாகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரை காப்பாற்ற முயன்ற ஐந்து பேர் படுகாயத்துடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக முத்தாண்டிக்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.

electicity Cuddalore birthday vijayakanth dmdk
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe