வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் ஐக்கியமாகிற தேமுதிக பல்வேறு ரகசிய உடன்படிக்கையை நிறைவேற்றி உள்ளதாக அரசியல் அரங்கில் பேசப்படுகிறது.போட்டியிடும் தொகுதிகளுக்கு ஆகும் செலவுகளை ஆளும் அதிமுக கட்சி அவர்கள் போட்டியிடுகிற தொகுதிக்கு எவ்வளவு செய்கிறார்களோ அதே அளவு தொகை தேமுதிக போட்டியிடும் தொகுதிகளுக்கும் செய்யப்படுவதாக பேசப்பட்டுள்ளது.

dmdk

Advertisment

மேலும் கட்சி வளர்ச்சி நிதிக்கும் வைட்டமின் ''ப'' கோரப்பட்டுள்ளது. அதனடிப்படையில் நேற்று முன்தினம் துணை முதலமைச்சர் ஓபிஎஸ் விஜயகாந்தை சந்தித்து பேசியபோது பாஜக,தமிழக பொறுப்பளரான பியூஸ் கோயல் அவர்களிடம் தொலைபேசி வழியாகவும் பிரேமலதா விஜயகாந்தை பேசவைத்துள்ளார்கள். இந்த பேச்சு வார்த்தையின் முடிவில் கூட்டணியில் 5 இடம் என முடிவாகியுள்ளது. ஆனால் தேமுதிக தரப்பில் மேலும் ஒரு இடம் கேட்கப்பட்டுள்ளது. அடுத்து ராஜ்ய சபா சீட் ஒன்றும் டிமாண்ட் வைக்கப்பட்டுள்ளது.

dmdk

Advertisment

இதற்கு பாஜக தரப்பு முழு மெஜாரிட்டியுடன் பாஜக ஆட்சி அமைந்தால் உறுதியாக தேமுதிகவிற்கு ஒரு ராஜ்ய சபா சீட்டுடன் மத்திய அமைச்சரவையிலும் பங்கு கொடுக்கப்படும். ஒருவேளை கூட்டணி ஆட்சி அமைத்தால் மத்திய வாரிய தலைவர் பதவி கொடுக்கப்படும் என பாஜக தரப்பு கூறியுள்ளது. இதன்பிறகே எதிர்பார்க்கப்பட்ட வைட்டமின் ''ப' அசைன்மென்ட் மும்பை, பெங்களூர் மற்றும் ஹைத்ராபாத் ஆகிய இடங்களில் கார்ப்பரேட் நிறுவங்கள் மூலம்செட்டில் செய்யப்படுவதாக உறுதிகூறப்பட்டுள்ளது. 6 ஆம் தேதி அன்று செட்டில்மென்ட் ஓகே என சிக்னல் கிடைக்க உள்ளது. தொடர்ந்து கூட்டணி மேடையில் தேமுதிக கைகுலுக்கும்.