ADVERTISEMENT

சென்னைக்கான தேமுதிக... தேனிக்கான அதிமுக... வேட்பாளர் பட்டியல்கள் வெளியீடு!

05:28 PM Jan 31, 2022 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் விறுவிறுப்பு அடைந்துள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தொடர்ந்து வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில், இந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் விஜயகாந்த் தலைமையிலான தேமுதிக தனித்துப் போட்டியிடுகின்ற நிலையில், ஏற்கனவே திருப்பூர் மாவட்டத்திற்கான வேட்பாளர் பட்டியலை தேமுதிக வெளியிட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து தற்போது சென்னையில் உள்ள மொத்தம் 200 வார்டுகளில் 100 வார்டுகளுக்கான வேட்பாளர்களை தேமுதிக வெளியிட்டுள்ளது.

அதேபோல் தேனி மாவட்ட பேரூராட்சிக்குட்பட்ட வார்டு உறுப்பினர் பதவிகளுக்கான அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. கொங்குவார்பட்டி-15, தேவதானப்பட்டி-18, வடுகபட்டி-7, தாமரைக்குளம்-15, தென்கரை-15, பழனிசெட்டிபட்டி-15, வீரபாண்டி-15, பூதிபுரம் -15, மீனாட்சிபுரம் -15, மேலசொக்கநாதபுரம்-15, குச்சனூர் -12, மார்க்கையன்கோட்டை-12, ஓடைப்பட்டி-15, உத்தமபாளையம் -18, கோம்பை -15, பண்ணையபுரம் -15, தேவாரம்- 18, ஆண்டிப்பட்டி-18, அனுமந்தன்பட்டி-15, புதுப்பட்டி-15 ஆகிய இடங்களில் அதிமுக போட்டியிடுவதற்கான வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT