Skip to main content

அமாவாசை தினத்தில்... அறிவிக்கும் கேப்டன்...

Published on 05/03/2019 | Edited on 06/03/2019

நாடாளுமன்ற தேர்தலில் தேமுதிக எந்த கூட்டணி என அரசியல் வட்டாரங்களில் கடந்த இரு வாரங்களாக பரபரப்பு ஏற்படுத்திய நிலையில் இன்று தேமுதிகவின் மாவட்ட செயலாளர்கள் மற்றும் கட்சியின் மாநில நிர்வாகிகள் கூட்டம் அந்த கட்சியின் தலைமை அலுவலகமான சென்னை கோயம்பேட்டில் நடைபெற்றது.இது சமபந்தமாக அக்கூட்டத்தில் கலந்துகொண்ட மா.செக்கள் சிலர் நம்மிடம் கூறியபோது...

 

dmdk

 

இன்று நடந்த கூட்டம் ஒரு சம்பிரதாயமான கூட்டம்தான். மொத்தம் 7 பேர் தான் பேசினார்கள்.கேப்டனின் மனைவியான பிரேமலதா மைத்துனர் சுதீஷ், அவை தலைவர் மோகன்ராஜ்,பொருளாளர் டாக்டர் இளங்கோவன் மற்றும் துணை செயலாளரான பார்த்தசாரதி உட்பட 7 பேர்தான் பேசினார்கள்.அப்போது நாம் திமுகவிடமும் பேசினோம் ஆனால் திமுக மிகக்குறைவான இடங்களையே தருவதாக கூறியது. 

 

 

சென்ற சட்டமன்ற தேர்தலில் தேமுதிகவை உடைத்த கட்சி திமுக என்றாலும் கூட்டணி அடிப்படையில் திமுகவிற்கு நாம் மரியாதை செலுத்தினோம்.ஆனால் திமுக நமக்கான உரிய மரியாதையை கொடுக்கவில்லை.தொகுதியை குறைவாக கொடுப்பதோடு தேர்தல் செலவுக்கும் நீங்கள் பார்த்துக்கொள்ளுங்கள் என கூறியது ஆனால் அதிமுக பாஜக கூட்டணியில் நமக்கு திமுக பேசியத்தைவிட கூடுதல் தொகுதிகள் கொடுப்பதோடு நாம் போட்டியிடுகின்ற தொகுதிகளின் தேர்தல் செலவுகளையும் அவர்களே பார்த்துகொள்ளவதாக உத்திரவாதம் கொடுத்துள்ளார்கள். 

 

dmdk

 

ஆகவே நமக்கு கூடுதல் தொகுதிகள் உரிய மரியாதை அதிமுக பாஜக கூட்டணியில்தான் உள்ளது. இந்த நிலையில் நமக்கு கூட்டணியில் போட்டியாக இருக்கிறபாமகவை விடகூடுதல் தொகுதிகள் கேட்கப்பட்டுள்ளது. இருப்பினும் கட்சியின் எதிர்காலம் கருதி.எவ்வளவு இடங்கள் எந்த தொகுதிகள் என நமது கேப்டன் சரியான முடிவெடுப்பார் என கூறியிருக்கிறார்கள். ஏற்கனவே அதிமுக கூட்டணியில் பேச வேண்டியதை எல்லாம் பேசிவிட்டு இந்த கூட்டத்தை போட்டு நிர்வாகிகளிடம் ஒப்புதல் பெற்றுவிட்டார்கள். 6 ஆம் தேதி அமாவாசை தினம் என்பதனால் செண்டிமெண்ட் படி கட்சியின் தலைவரான கேப்டன் விஜயகாந்த் அதிமுக பாஜக கூட்டணியில் தேமுதிக இணைந்துள்ளதாக அறிவிக்கப்போகிறார்.

 

 

 

சார்ந்த செய்திகள்