Advertisment

வீரமணி வீட்டை முற்றுகையிட்ட இந்து முன்னணியினர்... பாதுகாப்பிற்காக குவிந்த திகவினர்...!

சென்னையில் நடைபெற்ற துக்ளக் பத்திரிகையின் பொன்விழாவில் கலந்து கொண்ட நடிகர் ரஜினிகாந்த், "1971-ல் உடை இல்லாமல் இருக்கும் ராமன் சிலைக்கு செருப்பு மாலை போட்டு பெரியார் ஊர்வலம் சென்றார்" என தெரிவித்தார். இந்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியது.

Advertisment

dk chief k veeramani house blockade

ரஜினியின் இந்த கருத்திற்கு கண்டனம் தெரிவித்த திராவிட கழக தலைவர் கி. வீரமணி, "ரஜினி தனக்கு தானே குழி தோண்டிக் கொள்கிறார். அவரின் தர்பார் வேண்டுமானால் ஓடலாம், ஆனால் கண்டிப்பாக ராஜ தர்பார் ஓடாது" என தெரிவித்தார்.இதையடுத்து ரஜினிக்கு எதிராக தமிழகத்தில் பல பகுதிகளில் பெரியார் ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அது மட்டும் இல்லாமல் ரஜினி உயிரோடு நடமாட முடியாது என்று கொலை மிரட்டல் விடுத்தனர்.

Advertisment

dk chief k veeramani house blockade

இந்நிலையில் இந்து மதத்தையும், இந்துக்களையும் கி.வீரமணி மற்றும் திராவிட கழகத்தினர் இழிவாக பேசிவருவகாக கூறியும், ரஜினியின் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருவதை கண்டித்தும் இந்து ஜனநாயக முன்னணியினர் இன்று சென்னை அடையாறில் உள்ள கி. வீரமணி இல்லத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு பதட்டமான சூழல் நிலவி வருகிறது. இந்நிலையில் கி.வீரமணி இல்லத்தின் முன்பு திராவிட கழகத்தினர் பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டுள்ளனர்.

periyar rajini K.Veeramani
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe