Advertisment

'தீபாவளி சிறப்பு பேருந்து' எந்தெந்த இடத்தில் இருந்து செல்கிறது தெரியுமா..?

தீபாவளி பண்டிகையையொட்டி பெரும்பாலான மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்வது வழக்கம். அதனால் அவர்களுக்கு வசதியாக ஆண்டுதோறும் கூடுதல் பேருந்துகளைத் தமிழக போக்குவரத்துத் துறை சென்னையில் இருந்து இயக்கி வருகிறது. அதன்படி சென்னையில் 5 இடங்களில் தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டு, பேருந்துகள் இயக்கப்படும் எனவும், முன்பதிவு அடுத்த மாதம் 23ம் தேதி தொடங்குவதாகவும் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம். ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் சிறப்புப் பேருந்துகளின் வழித்தடங்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அவை பின்வருமாறு,

Advertisment

கோயம்பேடு: மயிலாடுதுறை, நாகப்பட்டினம், வேளாங்கண்ணி ,திருச்சி, மதுரை, திருநெல்வேலி, செங்கோட்டை, தூத்துக்குடி, திருச்செந்தூர், நாகர்கோவில், கன்னியாகுமரி, திருவனந்தபுரம், விழுப்புரம், பண்ருட்டி, நெய்வேலி, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், சேலம், கோயம்புத்தூர், எர்ணாகுளம் மற்றும் பெங்களூர் செல்லும் பேருந்துகள்.

மாதவரம்: ஆந்திர மாநிலத்திற்குச் செல்லும் அனைத்து பேருந்துகள் .

பூவிருந்தவல்லி: ஆற்காடு, ஆரணி, வேலூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், ஓசூர் செல்லும் பேருந்துகள்.

தாம்பரம் சானடோரியம்: விக்ரவாண்டி, பண்ருட்டி, கும்பகோணம், தஞ்சாவூர் செல்லும் பேருந்துகள்.

Advertisment

கே.கே நகர்: ஈசிஆர் வழியாகப் புதுச்சேரி, கடலூர் மற்றும் சிதம்பரம் செல்லும் பேருந்துகள்.

bus
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe