Skip to main content

தலைவர்களின் தீபாவளி வாழ்த்துச்செய்திகள்!

Published on 05/11/2018 | Edited on 05/11/2018

 

d


பாமக தலைவர் ராமதாசின் தீபஒளி திருநாள் வாழ்த்து செய்தி:

’’ஒளிகள் சிந்தும் உவப்பான திருவிழாவான தீப ஒளித் திருநாளைக் கொண்டாடும் தமிழக மக்கள் அனைவருக்கும் எனது இதயங்கனிந்த தீப ஒளித் திருநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தீபஒளித் திருநாள் என்றாலே மகிழ்ச்சியும், கொண்டாட்டமும் தான் நினைவுக்கு வரும். மகிழ்ச்சியையும்,  கொண்டாட்டங்களையும் நினைத்து மட்டும் தான் பார்க்க முடியுமோ? எனும் அளவுக்கு தமிழகத்தின் நிலைமை உள்ளது. தமிழ்நாட்டில் தீப ஒளித் திருநாளுக்கு ரூ.700 கோடிக்கு மது விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு ரூ.1,500 கோடிக்கு மது விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது என்பதைத் தவிர எந்த முன்னேற்றமும் தமிழகத்தில் ஏற்படவில்லை. வறுமை வாட்டுவதும், வேலையில்லாத் திண்டாட்டம் இளைஞர்களை துரத்துவதும் வாடிக்கையானதாகி விட்டன.

தீப ஒளி என்பது ஆண்டுக்கு ஒருமுறை மட்டும் கொண்டாடப்படுவதாக இருக்கக் கூடாது. தமிழ்நாட்டு மக்களின் வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும் தீப ஒளியால் நிறைந்து ஒளிமயமாகத் திகழ வேண்டும். அதற்கு அனைத்து துறைகளிலும் தமிழகம் முன்னேற வேண்டும். அத்தகைய இலக்கை நோக்கி உழைக்க தமிழக மக்கள் அனைவரும் ஒளி நிறைந்த இந்த நன்னாளில் உறுதியேற்றுக் கொள்ள வேண்டும்.’’


தேசிய முற்போக்கு திராவிட கழக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள 
தீபாவளி வாழ்த்து:

’’ஆண்டிற்கு ஒரு நாள் வருவது தீபாவளி திருநாள். அன்று எண்ணெய் குளியல் செய்துவிட்டு, புத்தாடை உடுத்தி, இனிப்புப் பண்டங்களை உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் வழங்கி பட்டாசு கொளுத்தி பெற்றோர்களுடனும், பிள்ளைகளுடனும் மகிச்சியோடு தீபாவளி திருநாளை கொண்டாடுவது வழக்கம்.
    தீமையை அகற்றி, நன்மையை விளைவிப்பதன் அறிகுறியாகவே விளக்கேற்றி வைக்கும் ஒளித் திருநாளாக தீபாவளி கொண்டாடப்படுகிறது. சாதாரண மக்களில் இருந்து, பெரும் பணக்காரர்கள் வரை தீபாவளி கொண்டாடவே ஆசைப்படுகின்றனர். விழாக்களும், பண்டிகைகளும் வருகிறது என்றாலே, ஏழை, நடுத்தர மக்கள் மகிழ்ச்சி அடைவதற்குப் பதிலாக யாரிடம் கடன் வாங்குவதென்ற கவலையே அடைகின்றனர். உணவுப் பண்டங்களின் விலை மட்டுமல்ல, ஆடைகள் மற்றும் பட்டாசுகள் என்று எதை வாங்கச் சென்றாலும் அவையெல்லாம் அதிகமான விலையிலேயே விற்கப்படுகின்றன. தங்களுடைய வருமானம் அன்றாட குடும்பச் செலவிற்கே சரியாகி விடுவதால் இதுபோன்ற பண்டிகைகளை கொண்டாட சிரமப்படும் நிலையிலேயே பெரும்பாலான மக்கள் உள்ளனர்.
    எனினும் இருப்பதைக் கொண்டு தீபாவளி திருநாளை மகிழ்ச்சியாக மக்கள் கொண்டாட வேண்டுமென்றும், எதிர்காலத்தில் அநீதி அழிந்து, நீதி தழைத்திட மக்களுக்கு நல்வாழ்வு அமைய வேண்டுமென்றும் தேமுதிக சார்பில் எனது தீபாவளி நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.’’
 

di

 

தருமபுரி நாடாளூமன்ற உறுப்பினர் அன்புமணி இராமதாஸ் 
தீபஒளி திருநாள் வாழ்த்துகள்!

’’வெளிச்சத்தின் திருவிழாவான தீப ஒளித் திருநாளை தமிழ்நாட்டிலும், உலகின் பல்வேறு பகுதிகளிலும்  கொண்டாடும் அனைவருக்கும் எனது உளமார்ந்த தீப ஒளி வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

கொண்டாட்டங்கள் எப்போதும் மகிழ்ச்சியானவை; அனைவராலும் விரும்பப்படுபவை. அத்தகையக் கொண்டாட்டங்களில் தீப ஒளிக்கு சிறப்பான இடம்  உண்டு. தீபஒளித் திருநாள் என்றாலே மகிழ்ச்சியும், கொண்டாட்டமும் தான் நினைவுக்கு வரும். புத்தாடை அணிந்து, மத்தாப்புக் கொளுத்தி, பிற மத நண்பர்களுக்கும், அண்டை வீட்டாருக்கும் இனிப்பு வழங்கும் வழக்கம் நட்பை வலுப்படுத்துவதுடன், நல்லிணக்கத்தையும் தழைக்கச் செய்கிறது. இது தான் தீப ஒளித் திருநாளின் சிறப்பு ஆகும்.

தீப ஒளித் திருநாளின் போது மக்களிடையே நிலவும் மகிழ்ச்சியும், கொண்டாட்டமும் ஆண்டு முழுவதும் நீடிக்க வேண்டும். அந்த அளவுக்கு அவர்களின் வாழ்க்கைத்தரம் உயர வேண்டும். மக்கள் வாழ்வில் துன்பங்கள் நீங்கி, இன்பங்கள் பெருக வேண்டும். மக்களிடையே அன்பு, நட்பு,  நல்லிணக்கம், சகோதரத்துவம் ஆகியவை மலர வேண்டும்; நாட்டில் அமைதியும், வளமும், மகிழ்ச்சியும் பெருக வேண்டும் என வாழ்த்துகிறேன்.’

தீப ஒளி திருநாளான தீபாவளி ஒவ்வொரு மனிதனின் உள்ளத்தில் இருக்கின்ற கெட்ட எண்ணங்களை அழித்துவிட்டு நல்ல எண்ணங்களை வளர வைக்கும் நாள். கணவன் மனைவியாக இருந்தாலும், அப்பா மகனாக இருந்தாலும், அண்ணன் தம்பியாக இருந்தாலும், நண்பர்களாக இருந்தாலும் நட்புக்கும் உறவுக்கும் நடுவே ஒருவரை பற்றி ஒருவருக்கு விமர்சனம் செய்யக்கூடிய, ஒத்துப்போகாத கருத்துகளும் இருக்கும். அப்படிப்பட்ட விசயங்களை இந்த நாளில் மனம் திறந்து வெடிக்க செய்துவிட்டு ஒளி படர செய்வதுதான் தீபாவளி. ஒவ்வொருவரும் தங்கள் உறவுகளுடன் மனம்விட்டு பேசி தீய எண்ணங்களை களைந்துவிட்டு நல்ல உறவுகளையும், நட்புகளையும் இன்று முதல் மேம்படுத்தி கொள்ள வேண்டும். நாடு முழுவதும் இப்படி ஒரு நட்பு ஒளி படர்ந்துவிட்டால் பொறாமை என்ற நம்முடைய பொது பகையாளியை ஒழித்துவிட முடியும். மனதில் இருக்கும் இருட்டையும், அழுக்கையும் அகற்றிவிட்டு அன்பும், பண்பும், தூய்மையும், நேர்மையும், நாணயமும்  கொண்ட ஒரு நல்ல வாழ்வினை நாளை முதல் அனைவரும் வாழ்ந்திட இந்த தித்திக்கும் தீபாவளி திருநாளில் வாழ்த்துகிறேன். மிகுந்த உற்சாகத்துடன் தீபாவளி திருநாளை கொண்டாடும் உங்களோடு சேர்ந்து நானும் கொண்டாட ஆசைபடுவதோடு கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் சார்பாக தீபாவளி நல்வாழ்த்துக்களை அனைவருக்கும் தெரிவித்துக்கொள்கிறேன்.’’

 

ddd

 

தமிழக மக்கள் அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள் - ஈஸ்வரன்
கொங்குநாடுமக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் விடுத்துள்ள தீபாவளி வாழ்த்துச்செய்தி:

தீப ஒளி திருநாளான தீபாவளி ஒவ்வொரு மனிதனின் உள்ளத்தில் இருக்கின்ற கெட்ட எண்ணங்களை அழித்துவிட்டு நல்ல எண்ணங்களை வளர வைக்கும் நாள். கணவன் மனைவியாக இருந்தாலும், அப்பா மகனாக இருந்தாலும், அண்ணன் தம்பியாக இருந்தாலும், நண்பர்களாக இருந்தாலும் நட்புக்கும் உறவுக்கும் நடுவே ஒருவரை பற்றி ஒருவருக்கு விமர்சனம் செய்யக்கூடிய, ஒத்துப்போகாத கருத்துகளும் இருக்கும். அப்படிப்பட்ட விசயங்களை இந்த நாளில் மனம் திறந்து வெடிக்க செய்துவிட்டு ஒளி படர செய்வதுதான் தீபாவளி. ஒவ்வொருவரும் தங்கள் உறவுகளுடன் மனம்விட்டு பேசி தீய எண்ணங்களை களைந்துவிட்டு நல்ல உறவுகளையும், நட்புகளையும் இன்று முதல் மேம்படுத்தி கொள்ள வேண்டும். நாடு முழுவதும் இப்படி ஒரு நட்பு ஒளி படர்ந்துவிட்டால் பொறாமை என்ற நம்முடைய பொது பகையாளியை ஒழித்துவிட முடியும். மனதில் இருக்கும் இருட்டையும், அழுக்கையும் அகற்றிவிட்டு அன்பும், பண்பும், தூய்மையும், நேர்மையும், நாணயமும்  கொண்ட ஒரு நல்ல வாழ்வினை நாளை முதல் அனைவரும் வாழ்ந்திட இந்த தித்திக்கும் தீபாவளி திருநாளில் வாழ்த்துகிறேன். மிகுந்த உற்சாகத்துடன் தீபாவளி திருநாளை கொண்டாடும் உங்களோடு சேர்ந்து நானும் கொண்டாட ஆசைபடுவதோடு கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் சார்பாக தீபாவளி நல்வாழ்த்துக்களை அனைவருக்கும் தெரிவித்துக்கொள்கிறேன்.

 

சார்ந்த செய்திகள்