/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/85_32.jpg)
18 மாதங்களுக்குள் பொதுத்துறையில் 10 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்ற வாக்குறுதியை பிரதமர் மோடி கடந்த ஜூன் மாதம் வழங்கினார் என்றும் அதன் படி 75,000 இளைஞர்களுக்கு அரசின் பல்வேறு துறைகள் மற்றும் அமைச்சகங்களின் கீழ் வேலை வாய்ப்பு வழங்கப்பட உள்ளதாகவும் அண்ணாமலை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
அந்த ட்விட்டர் பதிவில், “சொன்னதை செய்வார் மோடி! இந்த ஆண்டு ஜூன் மாதம்பிரதமர் மோடி18 மாதங்களுக்குள் பொதுத் துறையில் 10 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்ற வாக்குறுதியை வழங்கினார். நமது நாட்டிற்கு சேவை செய்யக் காத்திருக்கும் 75,000 இளைஞர்களுக்கு தீபாவளி பரிசாக அரசின் பல்வேறு துறைகள் மற்றும் அமைச்சகங்களின் கீழ் வேலைவாய்ப்பு வழங்கப்படவுள்ளது” என தெரிவித்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)