Skip to main content

தீபாவளிக்கு டாஸ்மாக்கில் ரூபாய் 466 கோடிக்கு மதுவிற்பனை!

Published on 15/11/2020 | Edited on 15/11/2020

 

diwali festival tasmac sales details

தீபாவளியையொட்டி நவம்பர் 13- ஆம் தேதி மற்றும் நவம்பர் 14- ஆம் தேதி ஆகிய இரு நாட்களில் டாஸ்மாக்கில் ரூபாய் 466 கோடிக்கு மதுவிற்பனையாகியுள்ளதாக டாஸ்மாக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

 

நவம்பர் 13- ஆம் தேதி 227.88 கோடிக்கும், நவம்பர் 14- ஆம் தேதி 237.91 கோடிக்கும் மதுபானங்கள் விற்பனையாகியுள்ளது. தமிழகத்தில் அதிகபட்சமாக மதுரை மண்டலத்தில் சுமார் ரூபாய் 104 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. அதேபோல், சென்னை மண்டலம்- ரூபாய் 94.36 கோடி, திருச்சி மண்டலம்- ரூபாய் 95.47 கோடி, கோவை மண்டலம்- ரூபாய் 84.56 கோடி, சேலம் மண்டலம்- ரூபாய் 87.58 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாகியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தீபாவளியில் ‘சியாமா பூஜை’ : காளி வழிபாடு!

Published on 14/11/2023 | Edited on 14/11/2023

 

Diwali Shyama Puja 

 

தீபாவளி பண்டிகையை ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு விதமாகக் கொண்டாடுகிறார்கள். அந்தவகையில் வங்காளத்தில் (கொல்கத்தா) காளி பூஜை மிகப் பிரபலம். நவராத்திரி காலங்களில் கொண்டாடப்படும் காளி பூஜையைப்போல, வங்கத்தில் தீபாவளியன்று ஒவ்வொரு வீட்டிலும் வண்ண வண்ணக் கோலங்களிட்டு, வரிசையாக விளக்குகளை அலங்கரித்து வழிபடுவது வழக்கம்.

 

இதுவொரு சமூக விழாவாகக் கொண்டாடப்படுகிறது. திறந்த வெளியில் பெரிய மைதானத்தில் சுமார் இருபது அடி உயரத்தில் நீலநிறக் காளியை எழுந்தருளச் செய்து பூஜை செய்வர். தீபாவளிப் பண்டிகையையொட்டி ஐப்பசி அமாவாசையன்று நள்ளிரவில் மக்கள் அனைவரும் ஒன்றுகூடி காளி பூஜையில் கலந்துகொள்வார்கள். அன்றிரவு முழுவதும் பட்டாசு வெடிகள் வெடிக்கும். வண்ண வண்ண வாண வேடிக்கைகளும் நடைபெறும். இந்த வாணவெடிகளின் ஒளியில் அமாவாசை இரவு பகல்போல் பிரகாசமாகத் திகழும். இதுகுறித்து அவர்கள் கூறும் காரணம் சற்று வித்தியாசமானது.

 

(தை- ஆனி மாதங்கள்) பகல் காலம்; தட்சிணாயனம் (ஆடி- மார்கழி மாதங்கள்) இரவுக் காலம் என்று இரு பிரிவுகளாகக் குறிப்பிடப்படுகிறதோ அதேபோல் மறைந்த முன்னோர்களுக்கு (பிதுர்களுக்கு) ஐப்பசி அமாவாசையன்று இரவு நேரம் துவங்குகிறதாம் அதாவது மறைந்த ஆத்மாக்களுக்கு அன்று முதல் (ஐப்பசி அமாவாசை) ஆறு மாதங்கள் தூக்கத்தைத் தரும் இரவுக் காலமாகக் கருதப்படுகிறது. இதனால் வீடுகளில் வரிசையாக அலங்கரிக்கப்படும் தீபங்களும், உயரமான இடத்தில் ஏற்றிவைக்கும் பெரிய அளவிலான தீபங்களும் இரவில் வழி தெரியாமல் தவிக்கும் பிதுர்களுக்கு வழிகாட்டுகிறதாம். அதனால்தான் உயரமான மூங்கில் கம்பங்களை ஊரின் பல இடங்களில் நட்டு, அவற்றின் உச்சியில் தீபமேற்றி ‘ஆகாச தீபம்' அமைக்கும் வழக்கம் உள்ளது. இன்றும் இந்த வழக்கம் வங்க கிராமங்களில் கடைப்பிடிக்கப்படுகிறது.

 

தீபாவளி அமாவாசை நள்ளிரவில் நடைபெறும் காளி பூஜையால், வரவிருக்கும் ஆபத்துகள் தவிர்க்கப்படுகிறதாம். அந்தநாளில் காளி தேவியை பயபக்தியுடன் பிரார்த்தனை செய்வதால் வருடம் முழுவதும் எந்தவித ஆபத்துகள், தடைகள் நேராவண்ணம் காளிதேவி காப்பாற்றுவதுடன், நல்லதே தருவாள். எடுத்த காரியங்கள் வெற்றியடையும். ஆரோக்கியமுடனும், வளமுடனும் வாழ காளிதேவி அருள்புரிவாள் என்பது ஐதீகம்.

 

அனைவரும் ஒன்றுகூடி வழிபடும் காளிதேவியின் மூர்த்தங்கள் நீலநிறத்தில் அமைந்திருக்கும். இந்தக் காளி, சாந்தமான திருமுகத்துடன் காட்சியளிப்பாள். நவராத்திரிக் காலங்களில் வழிபடப்படும் காளி கறுப்பு நிறத்தில் காட்சி தருவாள். முகத்தில் சற்று உக்கிரம் தெரியும்.

 

இதனை ‘சியாமா பூஜை' என்று போற்றுவர். இந்த பூஜையே வங்காளத்தில் தீபாவளியாகும். அன்று விடியற்காலையில் நீராடி, புத்தாடை அணிந்து வீடுகளிலும் பூஜை செய்வர். ஐந்து நாட்கள் கழித்து மைதானத்தில் எழுந்தருளச் செய்திருக்கும் பெரிய காளியின் திருவுருவை அருகிலுள்ள நீர்நிலையில் விசர்ஜனம் செய்வர்.

 

- டி.ஆர். பரிமளரங்கன்

 

 

Next Story

60 சிறப்பு ரயில்கள் - தெற்கு ரயில்வே அறிவிப்பு

Published on 08/11/2023 | Edited on 08/11/2023

 

nn

 

தீபாவளி பண்டிகைக்காக 60 சிறப்பு ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது.

 

இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில், பயணிகள் கூட்ட நெரிசலைத் தவிர்க்க மொத்தம் 12 வழித்தடங்களில் 60 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மாநிலங்களிலும் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. சென்னை, நெல்லை, நாகர்கோவில், கோவை, மங்களூர், பெங்களூரு, கொச்சுவேலி உள்ளிட்ட இடங்களுக்குச் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.

 

சென்னையிலிருந்து நாகர்கோவில், நெல்லை நகரங்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட இருக்கிறது. கொச்சுவேலியில் இருந்து பெங்களூரு, சென்னையிலிருந்து சந்திரகாச்சி, சென்னையிலிருந்து புவனேஸ்வர், நாகர்கோவிலில் இருந்து பெங்களூர் ஆகிய இடங்களுக்குச் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட இருக்கிறது.

 

தாம்பரத்திலிருந்து நாகர்கோவில் இடையே நவம்பர் 10, 17, 24 தேதிகளில் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட இருக்கிறது. நவம்பர் 11, 18, 25 ஆகிய தேதிகளில் நாகர்கோவிலில் இருந்து மங்களூருக்கு இடையே சிறப்பு ரயில் இயக்கப்பட இருக்கிறது. நாகர்கோவிலில் இருந்து மங்களூர், எர்ணாகுளத்தில் இருந்து தன்பாத் இடையே சிறப்பு ரயில்களும் இயக்கப்பட உள்ளன.

 

தீபாவளி பண்டிகையை ஒட்டி தெற்கு ரயில்வே மட்டுமின்றி மற்ற ரயில்வே மண்டலங்களிலிருந்தும் தென்னிந்தியாவிற்கு 36 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட இருக்கிறது. அதேபோல் சென்னையிலிருந்து நெல்லை இடையே நாளை வந்தே பாரத் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.