diwali festival special buses peoples tn govt

Advertisment

சென்னை உள்பட தமிழகம் முழுவதும் தீபாவளிக்கு பிந்தைய சிறப்பு அரசுப் பேருந்துகள் இன்றிரவு முதல் இயக்கப்படவுள்ளன. புதன்கிழமை வரை வரும் நான்கு நாட்களுக்கு 8,026 சிறப்பு பேருந்துகள் உள்பட 16,026 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பல இடங்களில் இருந்து சென்னைக்கு இன்று வழக்கமான 2,000 பேருந்துகளுடன் 1,395 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சென்னையைத் தவிர்த்து பிற இடங்களுக்கு இன்று 1,915 பேருந்துகள் இன்றிரவு இயக்கப்பட உள்ளன.