Advertisment

தீபாவளியை முன்னிட்டு ஐந்து கோடிக்கு ஆடுகள் விற்பனை!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆட்டுச் சந்தையில் ஜோரான விற்பனை. சுமார் ஐந்து கோடிக்கும் மேல் ஆடுகள் விற்பனையானது.

Advertisment

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள அய்யலூர் ஆட்டுச் சந்தையில் ஆடு, சேவல், கோழிகள் வாரந்தோறும் விற்பனைக்கு கொண்டு வருவது வழக்கம். மேலும் திண்டுக்கல் மாவட்டத்திலேயே மிகப்பெரிய ஆட்டுச்சந்தை என்பதால் மாவட்டத்திலுள்ள பல்வேறு ஊர்களிலிருந்து விவசாயிகள் ஆடுகள், கோழிகள், சேவல்களை கொண்டு வந்து விற்பனை செய்தும், வாங்கி செல்வதையும் வழக்கமாக கொண்டுள்ளன.

Advertisment

diwali festival coat market shop high sale

தற்பொழுது தீபாவளி பண்டிகைக்கு இன்னும் இரண்டு நாட்கள் உள்ள நிலையில் நேற்று கூடிய வார சந்தையில் மாவட்டத்தில் இருந்து ஏராளமான விவசாயிகள் ஆடுகள், கோழிகள், சேவல்களை விற்பனைக்காக கொண்டு வந்தன. அதை வாங்குவதற்கு தஞ்சாவூர், மதுரை, திருச்சி, தேனி, கோவை உள்பட பல்வேறு ஊர்களில் இருந்து வந்த வியாபாரிகள் போட்டி போட்டுக் கொண்டு அய்யலூர் சந்தைக்கு வந்த எட்டு கிலோ எடை கொண்ட ஒரு ஆடு 3800- க்கு விற்ககூடியதை 7000 ரூபாய் வரை விலை அதிகம் கொடுத்து ஆளுக்கு ஐந்து ஆடுகள், பத்து ஆடுகள், இருபது ஆடுகள் என வாங்கி சென்றனர். அதுபோல் கோழி 350 ரூபாய் வரையிலும் விற்பனையானது.

காலை மூன்று மணிக்கு தொடங்கி 11.00 மணி வரை நீடித்த ஆட்டு சந்தையில் ஏராளமான வியாபாரிகள் வந்திருந்ததால், சந்தையில் கூட்டம் அலை மோதியது. இப்படி வந்த வியாபாரிகள் தீபாவளிக்காக 5 கோடிக்கு மேல் ஆடுகளை வாங்கிச் சென்றுள்ளனர். இப்படி அய்யலூர் ஆட்டுச்சந்தைக்கு வெளியூரிலிருந்து வரும் வியாபாரிகளுக்கு எவ்வித வசதிகளும் இல்லை. குடிநீர், மின்விளக்கு, வசதி கூட இல்லாததால் பல வியாபாரிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். அதிக வருவாயை ஈட்டித் தரும் இந்த சந்தைக்கு அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தர சம்மபந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வியாபாரிகள் வலியுறுத்தினார்.

Farmers coat sale Dindigul district Tamilnadu
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe