Advertisment

தீபாவளி பண்டிகை.... சொந்த ஊருக்கு செல்வதற்காகக் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் குவிந்த மக்கள்! 

Advertisment

diwali festival chennai koyambedu bus stand

தீபாவளி பண்டிகையையொட்டி, சென்னையிலிருந்து சேலம், கோவை, திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இதற்கான டிக்கெட் முன்பதிவும் நடைபெற்று வருகிறது.

diwali festival chennai koyambedu bus stand

Advertisment

இந்த நிலையில் தீபாவளிக்கு இன்னும் ஒரே நாளே இருப்பதால், சென்னையில் உள்ள மக்கள் தங்களின் சொந்த ஊருக்கு செல்ல தொடங்கியுள்ளனர். இதனால் சென்னையில் உள்ள முக்கிய சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும் கோயம்பேடு பேருந்து நிலையம் மக்கள் கூட்டம் நிறைந்து காணப்பட்டது.

பண்டிகை காலங்களில் கரோனா தொற்று பரவ அதிக வாய்ப்புகள் இருப்பதால், பொதுமக்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி விழிப்புணர்வுடன் இருக்குமாறு மத்திய மற்றும் மாநில அரசுகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

bus stand Chennai diwali festival koyambedu
இதையும் படியுங்கள்
Subscribe