தீபாவளி பண்டிகை; ஆட்சியரகத்தில் கண்காட்சி! 

Diwali Exhibition at the trichy collector auditorium!

திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில், தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு‘சிறப்புக் கைத்தறிக் கண்காட்சி மற்றும்விற்பனை’ நடைபெற்றது. இதனை மாவட்ட ஆட்சியர் இன்று (25.10.2021) குத்துவிளக்கேற்றித் தொடங்கி வைத்துப் பார்வையிட்டார்.

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டுதிருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெறும் இக்கண்காட்சி 25.10.2021 முதல்03.11.2021 வரை (ஞாயிற்றுக்கிழமை நீங்கலாக) நடைபெறும்.தமிழ்நாட்டில் ஐவுளித்துறையில் புகழ்பெற்ற கைத்தறி நெசவாளர்கூட்டுறவுச் சங்கங்களில் உற்பத்தி செய்யப்பட்ட கைத்தறி பருத்தி சேலைகள், ஆர்கானிக் காட்டன் சேலைகள், மென்பட்டு சேலைகள், கோரகாட்டன் சேலைகள், பெட்ஷீட்கள் மற்றும் துண்டு ரகங்கள் எனசுமார் ரூ.50 இலட்சம் மதிப்பில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.இக்கண்காட்சியில் 20-க்கும் மேற்பட்ட கைத்தறி நெசவாளர்கூட்டுறவுச் சங்கங்கள் கலந்துகொண்டுள்ளன. இக்கண்காட்சி காலை 10.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெறுகிறது. மேலும், இக்கண்காட்சியில் ஜவுளி ரகங்களின்விற்பனைக்குத்தமிழக அரசினால் 30% தள்ளுபடி வழங்கப்பட்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

trichy
இதையும் படியுங்கள்
Subscribe