Advertisment

தடையை மீறி பட்டாசு வெடித்த 348 பேர் மீது வழக்கு!

DIWALI CELEBRATION PEOPLES CRACKERS TAMILNADU

Advertisment

தமிழகத்தில் காலை 06.00 மணி முதல் 07.00 மணி வரையும், மாலை 07.00 மணி முதல் 08.00 மணி வரையும் பட்டாசு வெடிக்க வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது. மேலும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியமும் பட்டாசு வெடிப்பது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது.

தமிழகம் உள்பட நாடு முழுவதும் தீபாவளி பண்டிகையை மக்கள் சிறப்பாக கொண்டாடினர். இந்த நிலையில் சென்னையில் அனுமதிக்கப்பட்ட நேரத்தைத் தாண்டி பட்டாசு வெடித்த 348 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதேபோல் மதுரையில் அரசு அனுமதித்த நேரத்தைத் தாண்டி பட்டாசு வெடித்த 154 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

காற்று மாசு காரணமாக, டெல்லி, ராஜஸ்தான், உள்ளிட்ட பல்வேறு மாநில அரசுகள் தங்களது மாநிலங்களில் பட்டாசு விற்கவும், வெடிக்கவும் தடை விதித்து உத்தரவிட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் டெல்லியில் காற்று மாசுவின் அளவு நேற்று அதிகரித்ததால் மக்கள் கடும் அவதியடைந்தனர்.

crackers diwali festival police Tamilnadu
இதையும் படியுங்கள்
Subscribe