Advertisment

தீபாவளி கொண்டாட்டம்; 4 வயது சிறுமிக்கு நேர்ந்த சோகம்

Diwali celebration The incident of a 4-year-old girl

பட்டாசு வெடித்தபோது தீக்காயம் அடைந்த சிறுமி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

இந்தியா முழுவதும் தீபாவளி பண்டிகை உற்சாகமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், தமிழகத்தில் பாரம்பரிய வழிபாடு மற்றும் கலாச்சார முறைகளில் தீபாவளி கொண்டாட்டம் களை கட்டுகிறது. பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை தமிழகத்தின் பல இடங்களில் மக்கள் புத்தாடை அணிந்து, பட்டாசு வெடித்து தீபாவளியைக் கொண்டாடுகின்றனர். மேலும் மக்கள் காலையிலேயே வழிபாட்டுத் தலங்களுக்குச் சென்று வழிபட்டு வருகின்றனர்.

Advertisment

இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே ரமேஷ் என்பவரின் மகள் ரவிச்சிகா (வயது 4) என்ற சிறுமிக்கு பட்டாசு வெடித்தபோது எதிர்பாரதவிதமாக தீக்காயம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து சிறுமி மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியிலேயே உயிரிழந்துள்ளார். பட்டாசு வெடித்தபோது தீக்காயம் அடைந்த சிறுமி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

child diwali tiruvannamalai
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe