style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
நிரந்தர தொழிலாளர்களுக்கு குறைந்தபட்சம் 8,400ரூபாயும் அதிகபட்சமாக 16,800 ருபாயம் தீபாவளி பண்டிகை போனஸாக வழங்கப்படும் என எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.
தமிழக அரசின்பொதுத்துறை நிறுவனங்களின் பணியாற்றுபவர்களுக்கு போனஸ் வழங்க 486 கோடியே 92 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பொதுத்துறையில் பணியாற்றும் 3.58 லட்சம் பேர் பயன்பெறுவர் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
லாபம் ஈட்டிய பொதுத்துறை நிறுவன ஊழியர்கள்மற்றும் லாபம் ஈட்டிய கூட்டுறவு சங்க தொழிலாளர்களுக்கு20 சதவிகித போனஸும், பிற கூட்டுறவு சங்க தொழிலாளர்களுக்கு 10 சதவிகித போனஸும்,நஷ்டம் அடைந்துள்ள பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு 10 சதவிகிதம் போனஸும், வீட்டு வசதி வாரியம் மற்றும் சென்னை குடிநீர் வாரியம் சி மற்றும் டிபிரிவு ஊழியர்களுக்கு 10 சதவிகித பொன்ஸும், மின்சார வாரியம் ,போக்குவரத்து கழகம், நுகர்பொருள் வாணிப கழக ஊழியர்களுக்கு 20 சதவிகிதம் போனஸும் அறிவிக்கப்பட்டுள்ளது.