Skip to main content

இந்துக்களின் உணர்வுகளை துன்புறுத்தும் செயல் - திருமாவளவன் பேட்டி

Published on 01/11/2018 | Edited on 01/11/2018
Diwali



தீபாவளி பட்டாசு வெடிப்பது குறித்து உச்சநீதிமன்றம் 2 மணி நேரம் கால அவகாசம் அளித்திருப்பது இந்துக்களின் உணர்வுகளை துன்புறுத்தும் செயல் ஆகும் என திருமாவளவன் கூறினார்.


விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தேசம் காப்போம் மாநாடு ஆய்த்த கூட்டம்   நடைப்பெற்றது. 
 

இக்கூட்டத்தில் கலந்துக்கொண்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநில தலைவர் தொல்.திருமாவளவன் முன்னாதாக செய்தியாளர் சந்திப்பில், உச்சநீதிமன்றம் தீபாவளிக் கொண்டாட்டத்தின் போது பட்டாசு வெடிப்பதற்கான கால அளவை 2 மணி நேரம் என்று நிர்ணயித்திருக்கிறது. 
 

பெரும்பான்மையாக உள்ள இந்து சமூகத்தினரின் உணர்வுகளை காயப்படுத்துவதாக அமைந்திருப்பது என்றாலும் விடுதலைச் சிறுத்தைகளை பொறுத்தவரையில் சுற்றுச்சூழல் மாசுபடுத்தாத வகையில் பட்டாசுகள் தயாரிக்கப்பட வேண்டும் அது பயன்படுத்தப்பட வேண்டும் என்றார். 
 

பண்டிகை காலங்கள் பெருமளவில் காற்று மாசுபடாத வகையில் சுற்றுச்சூழல் பாதிக்கப்படாத வகையில் தயாரிக்கப்பட வேண்டும் அது பயன்படுத்தப்பட வேண்டும். அந்தக் கருத்துக்களை வரவேற்கிறோம். இரண்டு மணி நேரம் மட்டுமே என்பதிற்கு பதிலாக மாசு படாதா எந்தெந்த பட்டாசுகளை வெடிக்க கூடாது என்று கூறலாம். 2 மணி நேரம் கால அவகாசம் அளித்திருப்பது இந்துக்களின் உணர்வுகளை துன்புறுத்தும் செயல்.
 

சி.பி.ஐ யில் நேர்மையானவர்கள் கட்டாயப்படுத்தி வெளியேற்றப்பட்டிருக்கிறார்கள். அதேபோல சிறப்பு இயக்குனரும் வெளியேற்றப்பட்டிருக்கிறார். ரபேல் ஊழல் குறித்த விசாரணையை தீவிரப்படுத்தி அதற்கான முயற்சிகளில் ஈடுட்டனர் என்பது தான் காரணம் என்று தெரியவந்திருக்கிறது. சிபிஐ அலுவலகத்தில் சிபிஐ சோதனை நடத்தும் நிலை முதன்முறையாக மோடி அரசில் தான் நடந்திருக்கிறது. நேர்மையான அதிகாரிகளின் செயல்பட முடியாத நிலை உள்ளது. மோடி அரசின் தலையீடு என்பது இருக்கிறது.
 

18 சட்டமன்ற உறுப்பினர்களின் தகுதி நீக்கம் செல்லும் என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்து இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. ஓராண்டுக்கு மேலாக 18 சட்டமன்ற தொகுதிகளிலும் மக்கள் பிரதிநிதிகள் இல்லை. இந்த நிலையில் தமிழக அரசும் தேர்தல் ஆணையமும் காலம் தாழ்த்தாமல் 20 தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்த முன்வரவேண்டும் என்றார்.
 

 

 

சார்ந்த செய்திகள்