Skip to main content

திவாகரன் உடல்நலம் குன்றியவர்... தினகரன் பேட்டி

Published on 26/04/2018 | Edited on 27/04/2018
dd

ராமநாதபுரம் மாவட்ட வர்த்தக அணிசெயலாளர் தவமுனியசாமியை நலம் விசாரிக்க சென்றபோது புதுக்கோட்டை  கட்டுமாவடியில் மாவட்ட செயலாளர் கார்த்திகேயன், ரத்தினசபாபதி எம்.எல்.ஏ மற்றும் அமமுகவினர் வரவேற்பு கொடுத்தனர். அப்போது காருக்குள் இருந்தே தினகரன் பேட்டியளித்தார்.

’’குட்கா ஊழல் வழக்கு விசாரணையை சிபிஐ விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது வரவேற்கதக்கது. சில அமைச்சர்கள், சில உயர் அதிகாரிகளின் பெயர்கள் அடிபட்டது இனி வெளிச்சத்துக்கு வரும். உப்பு தின்றவர்கள் தண்ணீர் குடிக்கத் தான் வேண்டும். இது குறித்து விசாரித்து நியாயமான நடவடிக்கை எடுக்கவேண்டும். திவாகரன் பொதுச்செயலாளரின் தம்பி, எனது மாமா அவ்வளவு தான். அவருக்கும் கட்சிக்கும் சம்பந்தம் இல்லை. உடல்நலம் பாதிக்கப்பட்டவர் கடந்த 2002- ம் ஆண்டே 50 வயதில்  பைபாஸ் செய்து உடல் நலம் சரியில்லாமல் உள்ளார். நேற்று பேட்டியின் போது கூட சோர்வாகத் தான் இருந்தார். பாவம் அவரைப்பற்றி கேள்வி கேட்டு
 என்னுடைய நேரத்தையும் உங்கள் நேரத்தையும் வீணடிக்க வேண்டாம். தனி நபர் குறித்து பேசி நேரத்தை வீணடிக்க வேண்டாம்.

நாங்கள் அம்மாவின் தொண்டர்கள்.  மீண்டும் அம்மா ஆட்சி அமைய போராடுகிறோம். அதனால இந்த மாதிரி சின்ன சின்ன காமெடிகள் எல்லாம் எங்களை பாதிக்காது.


  அமைச்சர் ஜெயக்குமார் அமமுக விலிருந்து யார் வேண்டுமானாலும் வரலாம் தினகரன் குடும்பம் தவிர என்று சொல்லி இருக்கிறாரே.?
   அவர்கிட்ட யார் போய் வருவதாக சொன்னார்கள் என்று தெரியல.. அதனால அவரிடம் தான் இந்த கேள்வியை கேட்கணும். 


திவாகரன் நடவடிக்கைகளுக்கு பின்னால பாஜக இருக்கிறதா.?
அவரைப் பற்றி பேசி நேரத்தை வீணடிக்க வேண்டாம் என்றார்.
   காவிரி டெல்டாவுக்காணது.. எங்களுக்கு இல்லை என்று அமைச்சர் வேலுமணி பேசியிருப்பது.?

அவர் தமிழ்நாட்டுக்கு அமைச்சரா? இல்ல கோவை தொண்டாமுத்தூருக்கு அமைச்சரான்னு தெரியலயே’’ என்றார். 

சார்ந்த செய்திகள்

Next Story

இந்திய அணியில் தேர்வு செய்யாததால் விரக்தி? - ரிஷப் பாண்ட் விளக்கம்

Published on 14/05/2018 | Edited on 14/05/2018

தான் கூறியதாக சமூக வலைத்தளங்களில் பரவிவரும் வதந்திக்கு ரிஷப் பாண்ட் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

pant

 

 

 

இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வீரர் ரிஷப் பாண்ட். இவர் தற்போது ஐ.பி.எல். தொடரில் டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். நடப்பு ஐ.பி.எல். தொடரில் ரிஷப் பாண்ட் 12 போட்டிகளில் 582 ரன்கள் குவித்து, அதிக ரன் அடித்த வீரர்களின் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறார். அதில் ஒரு சதமும், நான்கு அரைசதங்களும் அடக்கம். குறிப்பாக டெல்லி அணிக்காக விளையாடி அதிக ரன்கள் அடித்த கவுதம் கம்பீரின் சாதனையையும் ரிஷப் பாண்ட் முறியடித்துள்ளார். 2008ஆம் ஆண்டு நடந்த ஐ.பி.எல். தொடரில் கவுதம் கம்பீர் 534 ரன்கள் எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

 

இந்நிலையில், மே 8ஆம் தேதி ஆப்கானிஸ்தான், அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணியின் விவரம் வெளியானது. அதில் ரிஷப் பாண்டின் பெயர் இடம்பெறவில்லை. இதுகுறித்து, ‘ஆப்கானிஸ்தான், அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் அணியில் என் பெயரைத் தேர்வுசெய்யாத தேர்வுக்குழுவின் மீது நான் கடுங்கோபத்தில் இருக்கிறேன். என்னுள் இருக்கும் அத்தனை கோபங்களின் வெளிப்பாடுதான் நான் களத்தில் அடிக்கும் சிக்ஸர்கள். அவர்கள் என் விளையாட்டைப் பார்த்தாவது, என்னை அணியில் எடுக்காமல் விட்டதை நினைத்துப் பார்க்கட்டும்’ என ரிஷப் பாண்ட் சொன்னதாக சமூகவலைதளங்களில் வதந்தி பரவிவருகிறது. 

 

 

இதையறிந்த ரிஷப் பாண்ட், தனது ட்விட்டர் பக்கத்தில், ‘இந்திய அணியில் இடம்பெறாதது குறித்து நான் கூறியதாக ஒரு வதந்தி சமூகவலைதளங்களில் பரவிவருகிறது. நான் ஒருபோதும் அப்படி சொன்னதேயில்லை. அதை விளக்கவே இங்கு வந்தேன். எனவே, தயவுசெய்து வதந்திகளைப் பரப்பாதீர்கள். என் விளையாட்டில் கவனம் செலுத்தவிடுங்கள்’ என விளக்கமளித்துள்ளார்.

 

 

Next Story

இந்த சீசனிலும் டெல்லி அணிக்கு கடைசி இடம்தானா? - ஐ.பி.எல். போட்டி #42

Published on 10/05/2018 | Edited on 11/05/2018

ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் தொடரின் 11 சீசன் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதன் 42ஆவது போட்டி இன்று டெல்லி டேர்டெவில்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெறவுள்ளது. டெல்லியில் உள்ள பெரோஷா கோட்லா மைதானத்தில் வைத்து நடக்கும் இந்தப் போட்டி இரவு 8 மணிக்கு தொடங்கவுள்ளது. 

dd

 

 

புள்ளிப்பட்டியலில் நேரெதிர் திசைகளில் இருக்கும் இரண்டு அணிகளுக்கு இடையிலான இந்தப் போட்டி மட்டுமின்றி, மீதமிருக்கும் மூன்று போட்டிகளிலுமே வெற்றிபெற்றாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது டெல்லி அணி. 

 

சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியைப் பொருத்தவரை, கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி சென்னை அணியிடம் தோற்றதற்குப் பிறகு நடைபெற்ற ஐந்து போட்டிகளிலும் அடுத்தடுத்து வெற்றிபெற்றிருக்கிறது. அந்த ஐந்து போட்டிகளிலும் ஐ.பி.எல். போட்டிகளுக்கே உரித்தான அனைத்து பிரிவுகளைச் சேர்ந்த பொழுதுபோக்குகளை பார்வையாளர்களுக்கு ஐதராபாத் அணி தந்துவிட்டது எனலாம். இன்றோடு நான்கு போட்டிகளில் விளையாட இருக்கும் அந்த அணி, இன்னும் ஒரேயொரு போட்டியில் வெற்றி பெற்றாலே போதும் என்பதால், பிரச்சனையெல்லாம் டெல்லி அணிக்குதான்.

 

srh

 

 

மற்ற சீசன்களை ஒப்பிடும்போது தற்போது மிகச்சிறந்த கட்டமைப்பைக் கொண்டிருக்கும் டெல்லி அணி, கடந்த கால ஆட்டங்களையே வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறது. காலின் மன்ரோ, ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பாண்ட், பிரித்வி ஷாவ், ட்ரெண்ட் போல்ட் மற்றும் அமித் மிஷ்ரா என தரமான வீரர்களை வைத்துக்கொண்டும் அந்த அணி இன்னமும் சீசனையே தொடங்கவில்லை.

 

இன்னும் குறிப்பாக சொன்னால், கடந்த ஐந்து சீசன்களிலும் வெளியிடப்பட்ட தரவரிசைப் பட்டியல்களில் டெல்லி அணி ஆறாவது இடத்திற்கு மேல் முன்னேறியதே இல்லை. அதிலும் மூன்று முறை கடைசி இடத்தைப் பிடித்ததைத் தவிர அந்த அணிக்கென்று பெரிய வரலாறு கிடையாது. அடுத்த நான்கு போட்டிகளுக்குள்  புதிய வரலாறை அந்த அணியால் படைக்க முடியும் என்று நம்பினால் அதுவே மிகப்பெரிய மாற்றம்தான்.