ADVERTISEMENT

திவாகரன் மோடி சந்திப்பு?

01:33 PM Feb 09, 2019 | prakash

ADVERTISEMENT



சசிகலா உறவினர்கள் பிரதமரை சந்திக்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது. சசிகலாவின் சகோதரர் திவாகரன் இவர் அண்ணா திராவிடர் கழகம் என்கிற கட்சியை நடத்தி வருகிறார். இவர் நேற்று மத்திய அமைச்சர் பியூஸ் கோயலை சந்தித்திருக்கிறார். இன்று அவர் பிரதமர் மோடிக்கு நெருக்கமான ஆலோசகர் ஒருவரை சந்தித்துள்ளார். தினகரன் அமமுகவை அதிமுகவோடு இணைக்க பாஜக சொன்ன யோசனையை கேட்கவில்லை அதனால் திவாகரன் தினகரனுக்கு செக் வவைக்க நினைத்தார். அவர் தனது கட்சியை பாஜக கூட்டணியில் இணைப்பது அல்லது பாஜக யோசனை தெரிவித்தால் அதிமுகாவோடு தனது கட்சியை இணைப்பது என்கின்ற முடிவுக்கு வந்துள்ளார்.

ADVERTISEMENT

தினகரனை தனது எதிரியாக நினைக்கும் பாஜகவிற்கு கூடுதல் ஆதரவு நிலைகளை தமிழகத்தில் ஏற்படுத்த திவாகரன் பாஜகவோடு பேச தொடங்கியுள்ளார். சசிகலாவை தனது எதிரியாக கருதும் பாஜகவுடன் திவாகரன் ஏற்படுத்தியுள்ள இந்த உறவு சசிகலா சொல்லித்தான் நடந்துள்ளதா என்கிற கேள்வி அதிமுகவினரிடையே எழுந்துள்ளது.

இந்த சந்திப்பு திவாகரனின் தனிப்பட்ட முடிவா? அல்லது மன்னார்குடி குடும்பத்தின் திருவிளையாடலா? என்கிற கேள்வி எழுந்துள்ளது. ஆனால் இந்த சந்திப்பிற்காக கடந்த ஒரு மாதமாக திவாகரன் முயற்சி செய்து வந்தார். அவருடன் அதிமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வரும் அமைச்சர் பியூஸ் கோயல் நடத்திய சந்திப்பு பெரிய விவாதங்களை உருவாக்கி உள்ளது. அடுத்து என்ன நடக்கும், சசி குடும்பத்தினர் முழுவதுமே டிடிவி தினகரனுக்கு எதிராக உள்ள சூழலில் இந்த சந்திப்பு தினகரன் தனி சசி குடும்பம் தனி என்கிற நிலையை உருவாக்குமா? என்கிற கேள்வி எழுந்துள்ளது.

இதில் சசி தினகரன் பக்கம் நிற்பாரா அல்லது திவாகரன் பக்கம் போய் பாஜகவுடன் சமரசம் செய்து கொள்வாரா என்பது பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. ஜெ.மறைந்த இரண்டு ஆண்டுகளில் சசி குடும்ப உறுப்பினர் ஒருவரை மத்திய அமைச்சர் சந்திப்பது இதுதான் முதல்முறை என்பதால் இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT