dd

தினகரனுக்கும் சசிகலாவின் தம்பி திவாகரனுக்கும் மோதல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. இன்று மன்னார்குடியில் அம்மா அணி என்ற புதிய அமைப்பை துவக்கினார் திவாகரன்.

Advertisment

இந்நிலையில் சென்னை நேதாஜி நகரில் உள்ள முருகன் கோவிலில் டிடிவி.தினகரன் இன்று வழிபாடு நடத்திட வந்தார். அப்போது அவரிடம் திவாகரன் குறித்து எழுப்பிய கேள்விகளுக்கு , ‘’கடந்த 2002ல் இருந்து பைபாஸ் சிகிச்சை ஆகி உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்தார். தற்போது அவருக்கு மனநலமும் பாதிக்கப்பட்டது போல் இருக்கிறது. திவாகரனை துண்டிவிடுவது யாரென்று விரைவில் தெரியவரும். கோபத்தில் ஒரு தனிநபர் எடுக்கும் முடிவிற்கு எல்லாம் என்னால் பதில் சொல்ல முடியாது. திவாகரன் பற்றி எல்லாம் கேட்டு என்னுடைய நேரத்தை வீணாக்காதீர்கள்’’என்று தெரிவித்தார்.

Advertisment